திங்கள், 20 ஜூலை, 2015

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கலைஞர் அதிரடி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லாத காரணத்தால், ஏழை, எளிய விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள், ஏன் மாணவர்களும் கூட தொடர்ந்து , மனம் போன போக்கில் மதுவை அருந்தி, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிறார்கள். இந்தக் கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலி ஆகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.  மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Read more at:/tamil.oneindia.com/

1 கருத்து:

  1. மதுவிலக்கை ஒழித்து குடிமக்களை 'குடி'மக்கள் ஆக்கியவர் இவரே !

    தற்போது மதுவிலக்கை கொண்டுவந்து 'குடி' மக்களை குடிமக்கள் ஆக்கப்போகிறவரும் இவரே !

    ஆஹா ! கடவுளுக்கும் இவருக்கும் என்னே ஒரு ஒற்றுமை !

    "ஆக்குவாய் ,காப்பாய் ,அழிப்பாய் ,அருள் தருவாய் ! " என்பது திருவாசகம் .

    ஆக்குபவரும் இவரே ! அழிப்பவரும் இவரே ! ஆகவே ,இவரையே கடவுள் என்று அழைத்தாலும் தப்பில்லை .

    இந்த அரசியல் வாதிகளுக்கெல்லாம் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு CENTRAL ISSUE கிடைத்து விடுகிறது

    முன்பெல்லாம் ஒரு "இந்தி அரக்கி " இருந்தாள் ! அவளைக் காட்டியே நம்மை பயமுறுத்தி வைத்திருந்தனர் !

    ஆனால் பின்னர் அவளுடைய பேரப் பிள்ளைகளுடனேயே கூட்டு சேர்ந்து ஆட்சி சுகம் கண்டாகி விட்டது !

    அடுத்த தேர்தலில் அரிசிப் பஞ்சத்தைக் காட்டி அரசுக்கட்டில் ஏறினர் ! ரூபாய்க்கு மூன்று படி அரிசி போட்டாகி விட்டது !

    அடுத்து "வறுமையை ஒழிப்போம் "[GARIBI HATAO] என்றனர் !

    அடுத்து வந்தது இலங்கைப் பிரச்சினை ! இப்பொழுது அதற்கும் வழியில்லை !

    எனவே இந்தத் தேர்தலில் மது விலக்கை ஒரு CENTRAL ISSUE ஆக்குவதற்கு பாமக /மதிமுக/காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முயலுவதைக் கண்டவுடன் ,திமுக தலைவர் விழித்துக் கொண்டார் என்று தெரிகிறது !

    பதிலளிநீக்கு