செவ்வாய், 7 ஜூலை, 2015

ஆருஷி இரட்டைக் கொலை வழக்கு: தீர்ப்பை டைப் செய்த நீதிபதியின் மகன்

இளம் பெண் ஆருஷி - ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பின் முதல் சில பக்கங்களை  வழக்குரைஞரான தனது மகனை வைத்தே டைப் செய்ததாக புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் ஹிந்தி மட்டுமே தெரிந்தவர்கள் என்பதால், டைப் செய்ய ஆங்கிலம் தெரிந்த நீதிமன்ற ஊழியர்கள் கிடைக்கவில்லை. எனவே, தனது மகனை வைத்து தீர்ப்பை நீதிபதி எழுதியுள்ளார்.
ஆருஷி என்ற பெயரில் அவிரூக் சென் எழுதியுள்ள புத்தகத்தில், ஆருஷி கொலை வழக்கும், அதன் விசாரணையும் மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஆருஷி கொலை வழக்கில், மருத்துவர்களான அவளது பெற்றோர் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது dinamani.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக