ஞாயிறு, 12 ஜூலை, 2015

பிரியங்கா மகன் ரேகன் அமேதிக்கு திடீர் விசிட்


அமேதி: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் எம்.பி.,யாக உள்ள அமேதி தொகுதி யில், புது விருந்தாளியாக, அவரது சகோதரி பிரியங்காவின் மகன் வந்து தங்கிச் சென்றது, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உ.பி., மாநிலம் அமேதி, காங்கிரஸ் தலைவர்களின் பாரம்பரிய தொகுதியாக திகழ்கிறது. நேரு குடும்பத்தைச் சேர்ந்த பலர், இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,க்களாகி உள்ளனர். தற்போது, காங்., துணைத் தலைவர் ராகுல், இந்த தொகுதி யின் எம்.பி.,யாக உள்ளார். இவரின் சகோதரி பிரியங்கா, அடிக்கடி அமேதிக்கு வந்து பொதுமக்களுடன் அளவளாவி விட்டு செல்வது வழக்கம்.
பிரியங்காவின் மகன் ரேகன், 14, தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் காரில் வந்து இறங்கியபோது, அமேதி தொகுதி மக்களால், தம் கண்களையே நம்ப முடியவில்லை.  மக்களை முட்டாளாக்குவதில் எந்த கட்சியும் இந்தியாவில் சோடை போனதில்லை


ரேகனுக்கு உதவியாக, ராஜிவ் மகிளா விகாஸ் திட்ட நிர்வாகிகள் நிலேஸ் ஜெயினும், கே.எஸ்.யாதவும் வந்திருந்தனர். தன் தாத்தா ராஜிவ், தாய் வழி மாமன் ராகுலை போலவே, கிராம மக்களுடன் சகஜமாக கலந்து பேசி மகிழ்ந்தார் ரேகன்; கிராம மக்களின் வாழ்க்கை முறை, தேவை குறித்து ஆர்வமுடன் அவர் கேட்டறிந்தார்; ஒரு விவசாயியின் வீட்டுக்குள் திடீரென புகுந்து, ரொட்டியும், பருப்பும் கேட்டு உண்டு மகிழ்ந்தார். கிராம தெருக்களில், நண்பர் பரிவாரத்துடன் ரேகன் செல்லச் செல்ல, பொதுமக்கள் சந்தோஷ மிகுதியில் அவரை பின் தொடர்ந்தனர்.
சில மணி நேரத்துக்கு பின், இருள் சூழத் துவங்கியதும், ஒரு வீட்டின் வெளியே மரக்கட்டிலில் கொசுவலை விரித்து ஓய்வெடுத்தார்.

கடைசியாக, சஞ்சய் மருத்துவமனையில் உள்ள விருந்தினர் இல்லம் சென்று தங்கினார். ரேகனின் அமேதி பயணம் குறித்து, காங்., தரப்பில் அதிகாரபூர்வ செய்தி எதுவும்
வெளியிடப்படவில்லை. உள்ளூர் நிர்வாகமும் அமைதி காத்தது. இருப்பினும், ரேகனின் பயணம், அவரது அரசியல் பிரவேசத்துக்கு அச்சாரமாக இருக்குமோ? என, உள்ளூர் மக்கள் தமக்குள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக