ஞாயிறு, 5 ஜூலை, 2015

காஷ்மீரில் ராணுவவீரர் இளம்பெண்ணை வழிமறித்து நிர்வாணபடுத்தினார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பைக்கில் சென்ற இளம்பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வழிமறித்து பொதுமக்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தியுள்ளார். இச்சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் இதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரவ விட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் உள்ள ஜகனூ பகுதியில் இளம்பெண் ஒருவர் வாலிபருடன் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து சென்றுள்ளார்.  அப்போது ராணுவ வீரர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணை வழி மறித்து தகாத முறையில் நடந்துள்ளனர். அந்த இளம் பெண் 5 பேர் கொண்ட கும்பலிடம் எதிர்ப்பு தெரிவித்து போராடி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் இளம்பெண்ணை பொதுமக்கள் முன்னிலையில் ஆடையை களைத்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்தினர். இதனால் நிலைகுலைந்த அப்பெண் செய்வதறியாமல் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் இந்த சம்பவத்தை பயன்படுத்தி தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டுவிட்டார்.
தற்போது அந்த வீடியோ வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக