வியாழன், 23 ஜூலை, 2015

27 குழந்தைகளை கொலை செய்த கொடூரனுக்கு கோர்ட் வளாகத்தில் பளார்

துளியும் மனசாட்சியின்றி பல குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தொடர் கொலைக் குற்றவாளியை இன்று டெல்லி நீதிமன்றத்தில் வைத்து மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ளார். 6 வயது சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட, 24 வயது தொடர் கொலைக் குற்றவாளியான ரவீந்திர குமார் இன்று நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டான். அவனது போலீஸ் காவலை 4 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று போலீசார் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதை நிராகரித்த நீதிபதி, ரவீந்திர குமாரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இந்த 7 நாட்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று போலீசாரிடம் கேள்வியெழுப்பினார். இதற்கு, போதுமான ஆதாரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம் என்று பதில் சொன்ன போலீசார், ரவீந்திர குமார் மிகக் குறுகிய காலத்தில் 27 குழந்தைகளை கொலை செய்துள்ளதைக் குறிப்பிட்டனர். இந்நிலையில், நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட குமாரை நெருங்கிய சில மர்ம நபர்கள் அவனைத் தாக்க முயற்சித்தனர். அதில் ஒருவர் அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். அவர்களை போலீசார் விலக்கிவிட்டு குமாரை பத்திரமாக கொண்டு சென்றனர். இந்த வழக்கு விரைவில் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. maalaimalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக