வியாழன், 9 ஜூலை, 2015

2018ல், இந்தியா வில் 4.37 லட்சம் கோடீஸ்வரர்கள் அல்ல அல்ல கொள்ளைக்காரர்கள்?

அப்போ வறுமை கோடு அழிஞ்சு போய்டுமா? புதுடில்லி: 'வரும் 2018ல்,
இந்தியா வில் 4.37 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பர்; 2023ல் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும்' என, புதிய ஆய்வு கூறுகிறது. இதுகுறித்து, சிங்கப்பூரைச் சேர்ந்த 'வெல்த் எக்ஸ்' நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல்கள்: சொத்து உருவாக்கல் அடிப்படையில், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் காலமாக இருக்கும். கடந்த ஆண்டில், இந்தியாவில் 6.3 கோடி ரூபாய் அல்லது அதற்கு அதிக மதிப்பில் சொத்துடைய கோடீஸ்வரர் எண்ணிக்கை 2.5 லட்சம். முந்தைய ஆண்டை விட, 27 சதவீத புது பணக்காரர்கள் உருவாகி உள்ளனர்; வரும் 2018ல், இந்த எண்ணிக்கை, 4.37 லட்சமாக உயரும்; 2023ல், அதை விட, இரு மடங்கு கோடீஸ்வரர்கள் இருப்பர். இந்தியாவில் சிறப்பான சீர்திருத்தங்களை அமல்படுத்தி வரும் புதிய அரசு, பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் காரணமாக, புதிய உத்வேகத்துடன் நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில், இந்தியாவும், தென் ஆப்ரிக்காவும், குறிப்பிடத்தக்க வகையில், புதிய கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடுகளாக திகழும். இவ்வாறு, 'வெல்த் எக்ஸ்' நிறுவன ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக