ஞாயிறு, 19 ஜூலை, 2015

டெல்லி: 16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காமக்கொடூரன்


டெல்லியில் 6-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட வாலிபர் ரவிந்தர் குமார் (வயது 24), கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து மேலும் 15 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒத்துக்கொண்டு உள்ளான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதுதொடர்பாக போலீசில் வாக்குமூலம் அளித்துஉள்ள ரவிந்தர் குமார், சிறுமிகளுக்கு சாக்லேட் மற்றும் பணம் தருவதாக கூறி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்த நெரித்து கொலை செய்ததாகவும் கூறிஉள்ளான். கொலை செய்த பின்னர் சிறுமிகளின் உடலை கழிவுநீரில் வீசிவிடுவேன் அல்லது மண்ணில் புதைத்துவிடுவேன் என்று கூறிஉள்ளான்.

இதுவரையில் 6 கொலைகளில் குமாருக்கு தொடர்பு உள்ளதை வெளிக்கொண்டு வந்துஉள்ளனர். ஏற்கனவே பெகும்பூர் பகுதியில் சிறுவனை கொடூரமாக தாக்கிய விவகாரம் தொடர்பாக குமார் கைதுசெய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தான் என்பதும் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்துஉள்ள பேட்டியில், “வாலிபர் சிறுவனுக்கு பணம் தருவதாக பொய் சொல்லி அழைத்து சென்று உள்ளான். பின்னர் சிறுவனை கழுத்தை அறுத்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டான். அப்பகுதியாக சென்ற போலீசார் இரத்தம் வடிந்தநிலையில் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவன் காப்பாற்றப்பட்டான். பின்னர் குமார் கைதுசெய்யப்பட்டான்.

இதே வருடத்தில் 3 வயது சிறுமியிடம் அவன் தவறாக நடந்துக் கொண்டு உள்ளான்,” என்று கூறிஉள்ளார். நொய்டா மற்றும் அலிகார்க் பகுதிகளில் ரவிந்தர் குமார் டிரைவராக பணியாற்றியதாகவும், பதான் மாவட்டத்தில் இதேபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கண்ணீருடன் குமார் 16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துக் கொண்டதை ஒத்துக் கொண்டது தொடர்பாக விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். “குமார் கூறிய அனைத்தையும் நாங்கள் விசாரித்து வருகிறோம்.. இதுதொடர்பான எப்.ஐ.ஆர்.கள் மற்றும் உறவினர்கள் மூலம் அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்,” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக