புதன், 24 ஜூன், 2015

வேகமாக அருகிவரும் வீணை வாத்தியம் ! அருங்காட்சியகத்தில் மட்டுமே இனி?

ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை இசையை பற்றி எந்த ஞானமும்
கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும்,
அவ்வளவுதான் !. இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு ஊருக்கும் போகும்போதும் அங்கு பிரபலமாக இருக்கும் பொருட்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த முறை தஞ்சை செல்வதற்கு முன் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து சென்று இங்கு வீணை பிரபலம் என்று தெரிந்தது கொண்டேன், அதை செய்யும் இடம் சென்று பார்க்க வேண்டும் எனும்போது அதற்க்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டும் என்று அப்போது தெரியாமல் போனது. இன்று இசை என்பது கீ போர்டு, டிரம்ஸ் என்று ஆகிவிட்ட பிறகு இந்த வீணையின் மவுசு குறைந்து விட்டது. இன்று தஞ்சாவூரில் இப்படி வீணை செய்பவர்கள் என்பது மிகவும் குறைவு, இதனால் வீணை எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு ஆள் ஆளுக்கு
எங்களை அலையவிட்டனர் ! ஒரு கட்டத்தில் வெறுத்து போய் தஞ்சாவூரில் யார் வீணை பேமஸ் என்று சொன்னது என்று காண்டாகி இருந்தேன்...... முடிவில் ஒரு பெரியவரின் மூலம் ஒரு முகவரி கிடைத்தது ! (இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிப்பீர்களா என்பது சந்தேகமே, அவ்வளவு ஆராய்ச்சி செய்து, கேட்டு இருக்கிறேன்.....
ஆனால் தஞ்சாவூரின் வீணை பற்றிய பெருமையை நான் பதிவு செய்திருக்கிறேன் என்பது எனக்கு சந்தோசமே !!) பலா மரத்தினில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வீணையின் பகுதி 17ஆம் நுற்றாண்டில் தஞ்சையில் அரசர் இரகுநாத மன்னர் காலத்தில் முதன் முதலில் வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாதவீணை என்றும் பெயர் பெற்றது. மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக வீணைகள் காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டும் தொழில் நுணுக்கத்துடனும் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அறியலாம். ஒரு பலா மரத்தில் இருந்து ஆறு அல்லது ஏழு வீணை செய்யலாம் நான் வீணை வாசிக்கட்டுமா ?!
சுமார் 40 வருடங்கள் விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில்தான் வீணை செய்யப்படுகிறது. வாகை மரத்திலும் வீணை செய்யப்படுகிறது. இருப்பினும் பலா மரத்தில் செய்வதே சிறந்ததாகும். வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள் செய்யலாமாம். வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம். நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது குறையத் தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும். இப்படி குடைந்து எடுத்து வீணையின் உருவம் கொடுப்பார்கள் வேலைபாடு அதிகமாக அதிகமாக காசு ஜாஸ்தி ! தஞ்சையில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கின்றார்கள். 1) ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளித்தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் வீணை ஏகாண்ட வீணை என்று பெயர். 2) குடம், தண்டி, யாளித்தளை ஆகியவைகளை தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் வீணையை ஒட்டு வீணை அல்லது சாதா வீணை என்று பெயர். சாதாரண வீணை (சரஸ்வதி வீணை), ஏகாந்த வீணை, கார்விங் வீணை, உட்கார்விங் வீணை, விசித்திர வீணை, ருத்திரவீணை ஆகிய வகைகள் உள்ளன. இதில் விசித்திர வீணை என்பது கோட்டுவாத்தியம் எனவும் அழைக்கப்படும். இந்த வகை வீணை அரிது. இந்த வகை வீணை இசைப்பவர்களும் அரிது. இப்போது விசித்திரவீணை, ருத்திர வீணை போன்றவைகளும் அரிதாகிவிட்டன. வீணைக்கு பாலீஷ் செய்கிறார்கள் ஒரு வீணை உருவாகிறது ! கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டாலும், வீணை மீட்டல் என்றே கட்டுக்கோப்பான வகையில் வரையறுத்துக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும், வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை) மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவானந்தபுரம் விளங்குகின்றது. திருவானந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவானந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில் அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பன வற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை. வீணையின் பாகங்கள்.... வீணை வாங்கலியோ வீணை.... வீணையின் அளவு 41/4 அடி. வெளிக்கூடு அகலம் 14 1/2 அங்குலம். எடை சராசரியாக 7 கிலோவில் இருந்து 9 கிலோ வரை இருக்கும். அதில் குடம், மேற்பலகை, தண்டி, வளைவுமூடி மேல் உள்ள மாடச்சக்கை, சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் போன்ற பாகங்கள் உள்ளன. வீணையில் 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். வாசிப்பு தந்திகள் சாரணி, பஞ்சமம், மந்தரம், அநுமந்தரம் ஆகியவையாகும். சுருதி தந்திகள் பக்கசாரணி, பஞ்க பஞ்சமம், ஹெச்சு சாரணி ஆகியவை. தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும். குடம் உள்ள பக்கம் பெரிதாகவும், யாளி முனைப்பக்கம் சிறியதாகவும் காணப்படும். தண்டியின் இரு பக்கத்திலும் மெழுகுச்சட்டங்கள் இருக்கும். அவற்றின் மேல் 2 ஸ்தாயிகளை தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகில் இருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. 4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியில் உள்ள வளையங்களில் முடியப்பட்டு குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டு இருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டு இருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியை செம்மைபடுத்த பயன்படும். வளையங்களை நாகபாசபக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும். இது தனியாக செதுக்கி பொருத்தப்படும் யாழி தலை...... இவ்வீணையில் மீட்கப்படும் நான்கு தந்திகளும் முறையே, சாஸ்திரிக ரீதியில் நான்கு பெயர்களைக் கொண்ட தந்திகளாக அமைந்துள்ளன. அவை முறையே அனுமந்திரம், மந்திரம், பஞ்சமம், மற்றும் சாரணய் ஆகும். மூன்று தாள தந்திகளைக் கொண்டதாக அமையும் தந்திகள் முறையே பக்க சாரணி, பக்க பஞ்சமம் மற்றும் தீ வீர சாரணி ஆகிய சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றன. வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம் உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும். வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வீணையின் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள- சுருதித்தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப் படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல் களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொள்வார்கள். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன் னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது காலில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும். தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள் 8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது. இவ்வீணையின் அலங்கரிப்பு மற்றும் வேலைப்பாடுகளுக்கு யானைத் தந்தமும், மான் கொம்பும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ....... சொல்லடி சிவசக்தி...... தஞ்சாவூர் வீணை வாசிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள், இதை சீக்கிரம் அரும்காட்சியகத்தில் பார்க்கும் நாள் வரலாம் !ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை இசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் !. இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு ஊருக்கும் போகும்போதும் அங்கு பிரபலமாக இருக்கும் பொருட்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த முறை தஞ்சை செல்வதற்கு முன் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து சென்று இங்கு வீணை பிரபலம் என்று தெரிந்தது கொண்டேன், அதை செய்யும் இடம் சென்று பார்க்க வேண்டும் எனும்போது அதற்க்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டும் என்று அப்போது தெரியாமல் போனது. இன்று இசை என்பது கீ போர்டு, டிரம்ஸ் என்று ஆகிவிட்ட பிறகு இந்த வீணையின் மவுசு குறைந்து விட்டது. இன்று தஞ்சாவூரில் இப்படி வீணை செய்பவர்கள் என்பது மிகவும் குறைவு, இதனால் வீணை எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு ஆள் ஆளுக்கு எங்களை அலையவிட்டனர் ! ஒரு கட்டத்தில் வெறுத்து போய் தஞ்சாவூரில் யார் வீணை பேமஸ் என்று சொன்னது என்று காண்டாகி இருந்தேன்...... முடிவில் ஒரு பெரியவரின் மூலம் ஒரு முகவரி கிடைத்தது ! (இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிப்பீர்களா என்பது சந்தேகமே, அவ்வளவு ஆராய்ச்சி செய்து, கேட்டு இருக்கிறேன்..... ஆனால் தஞ்சாவூரின் வீணை பற்றிய பெருமையை நான் பதிவு செய்திருக்கிறேன் என்பது எனக்கு சந்தோசமே !!) பலா மரத்தினில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வீணையின் பகுதி 17ஆம் நுற்றாண்டில் தஞ்சையில் அரசர் இரகுநாத மன்னர் காலத்தில் முதன் முதலில் வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாதவீணை என்றும் பெயர் பெற்றது. மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக வீணைகள் காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டும் தொழில் நுணுக்கத்துடனும் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அறியலாம். ஒரு பலா மரத்தில் இருந்து ஆறு அல்லது ஏழு வீணை செய்யலாம் நான் வீணை வாசிக்கட்டுமா ?! சுமார் 40 வருடங்கள் விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில்தான் வீணை செய்யப்படுகிறது. வாகை மரத்திலும் வீணை செய்யப்படுகிறது. இருப்பினும் பலா மரத்தில் செய்வதே சிறந்ததாகும். வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள் செய்யலாமாம். வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம். நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது குறையத் தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும். இப்படி குடைந்து எடுத்து வீணையின் உருவம் கொடுப்பார்கள் வேலைபாடு அதிகமாக அதிகமாக காசு ஜாஸ்தி ! தஞ்சையில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கின்றார்கள். 1) ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளித்தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் வீணை ஏகாண்ட வீணை என்று பெயர். 2) குடம், தண்டி, யாளித்தளை ஆகியவைகளை தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் வீணையை ஒட்டு வீணை அல்லது சாதா வீணை என்று பெயர். சாதாரண வீணை (சரஸ்வதி வீணை), ஏகாந்த வீணை, கார்விங் வீணை, உட்கார்விங் வீணை, விசித்திர வீணை, ருத்திரவீணை ஆகிய வகைகள் உள்ளன. இதில் விசித்திர வீணை என்பது கோட்டுவாத்தியம் எனவும் அழைக்கப்படும். இந்த வகை வீணை அரிது. இந்த வகை வீணை இசைப்பவர்களும் அரிது. இப்போது விசித்திரவீணை, ருத்திர வீணை போன்றவைகளும் அரிதாகிவிட்டன. வீணைக்கு பாலீஷ் செய்கிறார்கள் ஒரு வீணை உருவாகிறது ! கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டாலும், வீணை மீட்டல் என்றே கட்டுக்கோப்பான வகையில் வரையறுத்துக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும், வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை) மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவானந்தபுரம் விளங்குகின்றது. திருவானந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவானந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில் அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பன வற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை. வீணையின் பாகங்கள்.... வீணை வாங்கலியோ வீணை.... வீணையின் அளவு 41/4 அடி. வெளிக்கூடு அகலம் 14 1/2 அங்குலம். எடை சராசரியாக 7 கிலோவில் இருந்து 9 கிலோ வரை இருக்கும். அதில் குடம், மேற்பலகை, தண்டி, வளைவுமூடி மேல் உள்ள மாடச்சக்கை, சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் போன்ற பாகங்கள் உள்ளன. வீணையில் 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். வாசிப்பு தந்திகள் சாரணி, பஞ்சமம், மந்தரம், அநுமந்தரம் ஆகியவையாகும். சுருதி தந்திகள் பக்கசாரணி, பஞ்க பஞ்சமம், ஹெச்சு சாரணி ஆகியவை. தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும். குடம் உள்ள பக்கம் பெரிதாகவும், யாளி முனைப்பக்கம் சிறியதாகவும் காணப்படும். தண்டியின் இரு பக்கத்திலும் மெழுகுச்சட்டங்கள் இருக்கும். அவற்றின் மேல் 2 ஸ்தாயிகளை தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகில் இருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. 4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியில் உள்ள வளையங்களில் முடியப்பட்டு குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டு இருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டு இருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியை செம்மைபடுத்த பயன்படும். வளையங்களை நாகபாசபக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும். இது தனியாக செதுக்கி பொருத்தப்படும் யாழி தலை...... இவ்வீணையில் மீட்கப்படும் நான்கு தந்திகளும் முறையே, சாஸ்திரிக ரீதியில் நான்கு பெயர்களைக் கொண்ட தந்திகளாக அமைந்துள்ளன. அவை முறையே அனுமந்திரம், மந்திரம், பஞ்சமம், மற்றும் சாரணய் ஆகும். மூன்று தாள தந்திகளைக் கொண்டதாக அமையும் தந்திகள் முறையே பக்க சாரணி, பக்க பஞ்சமம் மற்றும் தீ வீர சாரணி ஆகிய சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றன. வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம் உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும். வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வீணையின் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள- சுருதித்தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப் படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல் களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொள்வார்கள். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன் னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது காலில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும். தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள் 8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது. இவ்வீணையின் அலங்கரிப்பு மற்றும் வேலைப்பாடுகளுக்கு யானைத் தந்தமும், மான் கொம்பும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ....... சொல்லடி சிவசக்தி...... தஞ்சாவூர் வீணை வாசிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள், இதை சீக்கிரம் அரும்காட்சியகத்தில் பார்க்கும் நாள் வரலாம் !  kadalpayanangal.com


Copy and WIN : http://ow.ly/KNICZ
ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை இசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் !. இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு ஊருக்கும் போகும்போதும் அங்கு பிரபலமாக இருக்கும் பொருட்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த முறை தஞ்சை செல்வதற்கு முன் ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்து சென்று இங்கு வீணை பிரபலம் என்று தெரிந்தது கொண்டேன், அதை செய்யும் இடம் சென்று பார்க்க வேண்டும் எனும்போது அதற்க்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டும் என்று அப்போது தெரியாமல் போனது. இன்று இசை என்பது கீ போர்டு, டிரம்ஸ் என்று ஆகிவிட்ட பிறகு இந்த வீணையின் மவுசு குறைந்து விட்டது. இன்று தஞ்சாவூரில் இப்படி வீணை செய்பவர்கள் என்பது மிகவும் குறைவு, இதனால் வீணை எங்கு கிடைக்கும் என்று கேட்டதற்கு ஆள் ஆளுக்கு எங்களை அலையவிட்டனர் ! ஒரு கட்டத்தில் வெறுத்து போய் தஞ்சாவூரில் யார் வீணை பேமஸ் என்று சொன்னது என்று காண்டாகி இருந்தேன்...... முடிவில் ஒரு பெரியவரின் மூலம் ஒரு முகவரி கிடைத்தது ! (இந்த பதிவை நீங்கள் முழுமையாக படிப்பீர்களா என்பது சந்தேகமே, அவ்வளவு ஆராய்ச்சி செய்து, கேட்டு இருக்கிறேன்..... ஆனால் தஞ்சாவூரின் வீணை பற்றிய பெருமையை நான் பதிவு செய்திருக்கிறேன் என்பது எனக்கு சந்தோசமே !!) பலா மரத்தினில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வீணையின் பகுதி 17ஆம் நுற்றாண்டில் தஞ்சையில் அரசர் இரகுநாத மன்னர் காலத்தில் முதன் முதலில் வீணை செய்யப்பட்டது. ஆகவேதான் தஞ்சாவூர் வீணை என்றும் இரகுநாதவீணை என்றும் பெயர் பெற்றது. மீன், மடியல், படகு போன்ற வெவ்வேறு வடிவங்களில் வீணைகள் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ள வீணைகள் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும். இதன் வாயிலாக வீணைகள் காலத்தின் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டும் தொழில் நுணுக்கத்துடனும் செய்யப்பட்டு வந்துள்ளன என்பதை அறியலாம். ஒரு பலா மரத்தில் இருந்து ஆறு அல்லது ஏழு வீணை செய்யலாம் நான் வீணை வாசிக்கட்டுமா ?! சுமார் 40 வருடங்கள் விளைந்த பலா மரத்தின் அடி மரத்தில்தான் வீணை செய்யப்படுகிறது. வாகை மரத்திலும் வீணை செய்யப்படுகிறது. இருப்பினும் பலா மரத்தில் செய்வதே சிறந்ததாகும். வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள் செய்யலாமாம். வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம். நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது குறையத் தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும். இப்படி குடைந்து எடுத்து வீணையின் உருவம் கொடுப்பார்கள் வேலைபாடு அதிகமாக அதிகமாக காசு ஜாஸ்தி ! தஞ்சையில் இரண்டு வகையான வீணைகள் தயாரிக்கின்றார்கள். 1) ஒரே மரத்துண்டில் குடம், தண்டி, யாளித்தலை ஆகிய பாகங்களைச் செதுக்கிச் செய்யப்படும் வீணை ஏகாண்ட வீணை என்று பெயர். 2) குடம், தண்டி, யாளித்தளை ஆகியவைகளை தனித்தனியே செய்து ஒன்றாகப் பொருத்தி செய்யப்படும் வீணையை ஒட்டு வீணை அல்லது சாதா வீணை என்று பெயர். சாதாரண வீணை (சரஸ்வதி வீணை), ஏகாந்த வீணை, கார்விங் வீணை, உட்கார்விங் வீணை, விசித்திர வீணை, ருத்திரவீணை ஆகிய வகைகள் உள்ளன. இதில் விசித்திர வீணை என்பது கோட்டுவாத்தியம் எனவும் அழைக்கப்படும். இந்த வகை வீணை அரிது. இந்த வகை வீணை இசைப்பவர்களும் அரிது. இப்போது விசித்திரவீணை, ருத்திர வீணை போன்றவைகளும் அரிதாகிவிட்டன. வீணைக்கு பாலீஷ் செய்கிறார்கள் ஒரு வீணை உருவாகிறது ! கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டாலும், வீணை மீட்டல் என்றே கட்டுக்கோப்பான வகையில் வரையறுத்துக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும், வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை) மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவானந்தபுரம் விளங்குகின்றது. திருவானந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவானந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில் அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பன வற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை. வீணையின் பாகங்கள்.... வீணை வாங்கலியோ வீணை.... வீணையின் அளவு 41/4 அடி. வெளிக்கூடு அகலம் 14 1/2 அங்குலம். எடை சராசரியாக 7 கிலோவில் இருந்து 9 கிலோ வரை இருக்கும். அதில் குடம், மேற்பலகை, தண்டி, வளைவுமூடி மேல் உள்ள மாடச்சக்கை, சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் போன்ற பாகங்கள் உள்ளன. வீணையில் 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். வாசிப்பு தந்திகள் சாரணி, பஞ்சமம், மந்தரம், அநுமந்தரம் ஆகியவையாகும். சுருதி தந்திகள் பக்கசாரணி, பஞ்க பஞ்சமம், ஹெச்சு சாரணி ஆகியவை. தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும். குடம் உள்ள பக்கம் பெரிதாகவும், யாளி முனைப்பக்கம் சிறியதாகவும் காணப்படும். தண்டியின் இரு பக்கத்திலும் மெழுகுச்சட்டங்கள் இருக்கும். அவற்றின் மேல் 2 ஸ்தாயிகளை தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகில் இருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. 4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியில் உள்ள வளையங்களில் முடியப்பட்டு குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டு இருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டு இருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியை செம்மைபடுத்த பயன்படும். வளையங்களை நாகபாசபக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும். இது தனியாக செதுக்கி பொருத்தப்படும் யாழி தலை...... இவ்வீணையில் மீட்கப்படும் நான்கு தந்திகளும் முறையே, சாஸ்திரிக ரீதியில் நான்கு பெயர்களைக் கொண்ட தந்திகளாக அமைந்துள்ளன. அவை முறையே அனுமந்திரம், மந்திரம், பஞ்சமம், மற்றும் சாரணய் ஆகும். மூன்று தாள தந்திகளைக் கொண்டதாக அமையும் தந்திகள் முறையே பக்க சாரணி, பக்க பஞ்சமம் மற்றும் தீ வீர சாரணி ஆகிய சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றன. வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம் உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும். வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வீணையின் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள- சுருதித்தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப் படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல் களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொள்வார்கள். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன் னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது காலில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும். தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள் 8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது. இவ்வீணையின் அலங்கரிப்பு மற்றும் வேலைப்பாடுகளுக்கு யானைத் தந்தமும், மான் கொம்பும் பயன்படுவது குறிப்பிடத்தக்கது. நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ....... சொல்லடி சிவசக்தி...... தஞ்சாவூர் வீணை வாசிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள், இதை சீக்கிரம் அரும்காட்சியகத்தில் பார்க்கும் நாள் வரலாம் !

Copy and WIN : http://ow.ly/KNICZ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக