வியாழன், 25 ஜூன், 2015

206 கோடி ஊழல் !Maharashtra BJP அமைச்சர் பங்கஜ முண்டே மீது குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் பங்கஜ முண்டே 206 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.மாநிலம் முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் நொறுக்குத் தீனி, புத்தகம் உட்பட பல்வேறு பொருட்களை வாங்கியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக, காங்., முன்னாள் முதல்வர் பிரித்வி ராஜ் சவான் குற்றம்சாட்டியுள்ளார்.சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மகாராஷ்டிர அரசு 3 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ஒப்பந்தங்களை, மின்னணு முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.  இவர் மறைந்த பிரமோத் மகாஜனின் மருமகள்.அகில இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாவிதமான ஊழல்களையும் செய்துவிட்டனர். இனி நோட்டு அடிக்கவேண்டியது தான் பாக்கி ....


ஆனால் பங்கஜ முண்டே பிப்., 13 அன்று, 24 அரசு தீர்மானங்கள் மூலம் 206 கோடி ரூபாய்க்கு பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.இதன்படி அகமது நகரில் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, 'சிக்கி' என்ற நொறுக்குத் தீனியில் களிமண் கலந்திருப்பது தெரியவந்தது.இது தொடர்பாக, அகமது நகர்மன்ற தலைவர், பங்கஜ முண்டே அலுவலகத்திற்கு அனுப்பிய புகாரைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

வெளிநாட்டில் உள்ள அவர் தன் மீதான புகாரை ஊர் திரும்பியதும் பொய் என்று நிரூபிக்க உள்ளதாக ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக