சனி, 27 ஜூன், 2015

ஜூலை 1ல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்? முடக்கி வைத்த சாதனைக்கு வெற்றி விழா!

சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா, ஜூலை, 1ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது' என, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:மெட்ரோ ரயில் முதற்கட்ட சேவை துவக்க விழாவிற்கு, தேதியை முடிவு செய்யும்படி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவின் எதிர்ப்பையும் மீறி திமுகவால் நிறைவேற்றப்பட்ட திட்டம் இது. ஜெயலலிதாவின் கையால் திறக்கப்படவேண்டும் என்று மாதக்கணக்காக முடக்கிவைத்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி இப்போதாவது திறக்க உள்ளமைக்கு நன்றி. சீக்கிரம் ஒப்பின் பண்ணுங்க மீண்டும் உள்ள போயிட்டா பிறகு எப்பதாய்ன் தொடங்கிறது? 
அதன்படி, தமிழக அரசு, ஜூன், 28, 30 மற்றும் ஜூலை, 1 ஆகிய மூன்று தேதிகளை, தேர்வு செய்து அனுப்பியது. தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், 30ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளதாலும், ஜூலை, 1ம் தேதி, மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா நடைபெற அதிக வாய்ப்புள்ளது. எனினும், முதல்வர் முடிவை பொறுத்து, தேதி மாறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மின்சார ரயில் நிலைய பாணியில் மெட்ரோ ரயில்: ஏறி, இறங்கலாம்; இறங்கிய உடன் பஸ் அடுத்த சில நாட்களில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்குகிறது. முதற்கட்டமாக, கோயம்பேடு - ஆலந்துார் இடையே, 10 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் இயங்க உள்ளது. இந்த வழித்தடத்தில், கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காடுதாங்கல், ஆலந்துார் என, ஏழு இடங்களில், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. கோயம்பேடு: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து, கோயம்பேடு மார்க்கெட் செல்லும் சாலையில் உள்ளது. சாலையின் மத்தியில், உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் உள்ள இந்த ரயில் நிலையத்திற்கு, பயணிகள் வந்து செல்ல வசதியாக, படிக்கட்டு, மின்துாக்கி போன்ற வசதிகள் உள்ளன.

ரயில் நிலையத்தில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ரோகிணி தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளது. அத்துடன், இந்த ரயில் நிலையத்திற்கு, மாநகர பஸ்கள் வந்து செல்லும் வசதியும் வர உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம்: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம், கோயம்பேடு மாநகர பஸ்கள் நின்று செல்லும் வளாகத்தின் பக்கவாட்டில், 50 மீட்டர் துாரத்தில் உள்ளது. ஆலந்துார் - கோயம்பேடு மார்க்கத்தில் இருந்து, கோயம்பேடு பஸ் நிலையம் செல்ல விரும்புவோர், மெட்ரோ ரயிலில் பயணித்து, பஸ் நிலையத்திற்குள் இறங்கி கொள்ளலாம். கோயம்பேடு ரயில் நிலையத்தில் இருந்து, மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பஸ் வசதி உள்ளது. அரும்பாக்கம்: கோயம்பேடு - வடபழனி இடையே உள்ளது அரும்பாக்கம் ரயில் நிலையம். 100 அடி சாலையின் மத்தியில் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு, இருபுறத்தில் இருந்தும் பயணிகள் வந்து செல்ல வசதி உள்ளது. கோயம்பேடு - வடபழனி மார்க்கத்தில், ரயில் நிலையத்திற்கு, 300 மீட்டர் துாரத்திற்கு முன், எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிறுத்தம் உள்ளது. வடபழனி - கோயம்பேடு மார்க்கத்தில், சாலையின் மறுபுறம், 100 மீட்டர் துாரத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து, இந்த பஸ் நிறுத்தங்களை அடைந்து, மாநகர பஸ்களில் செல்ல முடியும். வடபழனி: வடபழனி சிக்னல் அருகே, வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. சாலிகிராமம், விருகம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் வசிப்போர், வடபழனி சிவன் கோவில் பஸ் நிறுத்தம் அல்லது வடபழனி பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து வடபழனி ரயில் நிலையத்தை அடைய முடியும்.வடபழனி பஸ் நிலையத்தில் இருந்து, 400 மீட்டர் துாரத்தில் ரயில் நிலையம் உள்ளது. மேலும், 100 அடி சாலையின் இரு மார்க்கங்களிலும், 100 மீட்டர் துாரத்தில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ரயில் நிலையத்தில், சாலையின், இருபுறமும் வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக அவசரகால வழியும் அமைக்கப்பட்டுள்ளது. விபத்து நேரங்களில், இந்த வழியாக பயணிகள் எளிதாக வெளியேற முடியும். அசோக் நகர்: அசோக்நகர் ரயில் நிலையம், 100 சாலையின் பக்கவாட்டில், உதயம் தியேட்டர் எதிரே உள்ளது. ரயில் நிலையத்திற்கு முன், உதயம் தியேட்டர் பஸ் நிறுத்தம் உள்ளது. ஜாபர்கான்பேட்டை, கே.கே.நகர் பகுதிகளில் வசிப்போர் அசோக்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி, 100 மீட்டர் துாரத்தில் உள்ள, இ.எஸ்.ஐ., மருத்துவமனை பஸ் நிறுத்தம் சென்று, மாநகர பஸ்களில் செல்லலாம்.ஈக்காடுத்தாங்கல் அரும்பாக்கம், வடபழனி ரயில் நிலையம் போல், ஈக்காடுத்தாங்கல் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இருபுறமும் இறங்கிச் செல்ல வசதி உள்ளது. அம்பாள் நகர் பஸ் நிறுத்தம், ஓட்டல் ஹில்டன் பஸ் நிறுத்தம் என, சாலையின் இருபுறமும், ரயில் நிலையம் அருகே பஸ் நிறுத்தங்கள் உள்ளன. கிண்டி தொழிற்பேட்டைக்கு செல்வோர், இந்த ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல முடியும். ஆலந்துார்: கிண்டி, கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து இறங்கி, 100 மீட்டர் துாரத்தில், சாலையையொட்டி ஆலந்துார் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையத்திற்கு, இருபுறமும் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ரயில் நிலையம் எதிரே, 'ஏசி' பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால், ரயில் நிலையத்திற்கு செல்ல சாலையை கடக்க இயலாது. மாறாக, 200 மீட்டர் தொலைவில் உள்ள சுரங்கப்பாதைக்கு சென்று வர வேண்டும்.

1. மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சாலையின் இருபுறத்திலிருந்தும் பயணிகள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. இடம்: அரும்பாக்கம். 2. சாலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையம். 3. மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இடம்: வடபழனி மெட்ரோ ரயில் நிலையம். பஸ் வசதி எப்படி? நுாறடி சாலை மற்றும் சந்திப்பில் தான், ஏழு ரயில் நிலையங்களும் உள்ளன. இதனால், கோயம்பேடு - தாம்பரம் மார்க்கத்தில் செல்லும் தடம் எண், 70 உள்ளிட்ட, மாநகர பஸ்களில் ரயில் நிலையங்களுக்கு சென்று வர முடியும். வடபழனியில், ஆற்காடு சாலை சந்திப்பு வருவதால், விருகம்பாக்கம், வளசரவாக்கம், சாலிகிராமத்தில் வசிப்பவர்களும், மறு மார்க்கத்தில் கோடம்பாக்கத்தில் வசிப்பவர்களும், தடம் எண், 26 பஸ் மூலம் ரயில் நிலையம் வந்து செல்ல முடியும்.ஆலந்துார் ரயில் நிலையத்திற்கு, தாம்பரம் - பிராட்வே இடையே செல்லும், அனைத்து பஸ்களிலும் வந்து செல்ல முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக