கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி
பெற்று வந்த வீராங்கனை ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவர்
தவிர விஷம் அருந்திய மேலும் 3 வீராங்கனைகள் ஆபத்தான நிலையில்
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்குள்ள நீர் விளையாட்டு மையத்தில் பயிற்சி பெற்று வந்த இந்த 4
வீராங்கனைகளில் இருவர் தங்கப்பதக்கம் வென்றவர்கள் ஆவார்கள். பயிற்சி
மையத்தில் மூத்த வீரர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தந்த தொந்தரவே
தங்கள் பிள்ளைகள் தற்கொலை முயற்சியில் இறங்க காரணம் என வீராங்கனைகளின்
பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்விவகாரம் பற்றி தெரிந்தவுடன் தேசிய
விளையாட்டு ஆணைய தலைவரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய விளையாட்டு துறை இணை
மந்திரி சர்பானந்தா சோசோவால், இச்சம்பவம் குறித்தும், வீரர்கள் மீது
சுமத்தப்படும் குற்றச்சாட்டு பற்றியும் விசாரணை நடத்துமாறு
உத்தரவிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன் இச்சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட வீராங்கனையை பயிற்சியாளர் ஒருவர் துடுப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த வீராங்கனை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து இவ்வாறு டார்ச்சர் தரப்பட்டதால் 4 வீராங்கனைகளும் தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்து விஷம் அருந்திய நிலையில், நேற்று மாலை 4 வீராங்னைகளும் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டனர்.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 4 பேரில் ஒரு வீராங்கனை உயிரிழந்தார். எஞ்சியுள்ள 3 பேரின் நிலையும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக