செவ்வாய், 12 மே, 2015

ஜெயாவுக்கு வாழ்த்து தெரிவித்த வைகோ ,மோடி,வாசன்,ஆளுநர் ரோசையா பாஜக ராசா ....இவிங்க எல்லாம் இனி ..

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மோடி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழக ஆளுநர் ரோசய்யா ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, பூங்கொத்து ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல்குமார் அஞ்சன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர்  வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பல்வேறு அரசியல் தலைவர்களும், தொழில் துறையினரும், திரைத்துறையினரும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக