செவ்வாய், 12 மே, 2015

வினவு: கொள்ளைக்காரி ஜெயா விடுதலை ? போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம்

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என்று அழைக்கப்படும், திருட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பளித்து விட்டார் குமாரசாமி. சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் சற்று நம்பிக்கை ஊட்டப்பெற்றிருந்த திமுகவினரும் பிற எதிர்க்கட்சிகளும் இந்த தீர்ப்பினால் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதால், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமே அமையவே முடியாது என்று கருதிய பலருக்கும் இது அதிர்ச்சிதான். ஆனால், 18 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அனுபவம் என்ன? குன்ஹாவின் தீர்ப்பையும், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அரிதான சில தீர்ப்புகளையும் தவிர்த்து, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம் இருந்து வந்திருக்கின்றது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் எடுபிடியாகவே உச்ச நீதிமன்றம் நடந்து கொண்டு வருவதையும், நீதித்துறையே பார்ப்பனக் கும்பலுக்கும் பார்ப்பன பாசிசத்துக்கும் ஆதரவாக செயல்பட்டு வருவதையும் நாம் தொடர்ந்து அம்பலப் படுத்தி வந்திருக்கின்றோம்.
18 ஆண்டுகாலம் இந்த வழக்கை இழுப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை. நியாயமான முறையில் ஒரு விசாரணை நடத்தினால், ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.
ஜெயலலிதா வழக்கில் மட்டுமல்ல, சங்கராச்சாரியில் தொடங்கி, மோடி, அத்வானி, அமித் ஷா உள்ளிட்ட எல்லா பார்ப்பன பாசிசக் கொலையாளிகளையும், முஸ்லிம்களை நரவேட்டையாடிய போலீசு அதிகாரிகளையும், தலித் படுகொலைக் குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விடுதலை செய்கின்றன. சல்மான் கான் போன்ற பணக்காரப் பொறுக்கிகளுக்குத்தான் கருணை காட்டுகின்றன.
இதுதான் நீதித்துறையின் யோக்கியதை என்று பல சந்தர்ப்பங்களில் அம்பலமாகியிருந்த போதிலும், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நீதித்துறையின் பார்ப்பன பாசிச ஆதரவு அப்பட்டமாகத் தெரிந்த போதிலும், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கத்தான் செய்தது. உண்மையில் அது அவர்களது விருப்பம். அதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. தங்களது அந்த விருப்பத்தை நீதிமன்றத்தின் மீதான மூடநம்பிக்கையாக அவர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். மக்களுக்கும் அத்தகைய நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.
கருணாநிதியும் மற்ற எதிர்க்கட்சிகளும் இதைத்தான் செய்து வருகின்றனர். குன்ஹாவின் தீர்ப்பு வந்தால், “நீதி வென்றது” என்று குதூகலிப்பது, தத்துவின் தீரப்பு வரும்போது, “இந்த நாட்டில் நீதி இருக்கிறதா?” என்று புலம்புவது, மறுபடியும் பவானி சிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வந்தவுடன் “நீதி இன்னும் சாகவில்லை” என்று ஆறுதல் கொள்வது – இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகளின் அரசியல்.
நீதிமன்றத்தின் மூலம் மிகவும் அரிதான சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கலாம். அரிதான சில வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதும் நடக்கலாம். குன்ஹாவின் தீர்ப்பைப் போன்றவை அத்தகைய விதிவிலக்குகளே. விதிவிலக்காக இப்படி நீதி கிடைக்கும் தருணங்களில் அதற்காக நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் நீதி மன்றத்தின் மூலம் இந்த மக்கள் விரோதிகளைத் தண்டித்து விட முடியும் என்ற மயக்கத்துக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. நீதித்துறையே குற்றவாளிகளின் கூடாரமாகவும், தீர்ப்பு என்பது விலைப்பேசி விற்கப்படும் பொருளாகவும் மாறி வெகு காலமாகிவிட்டது.அங்கே மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது.
எனவே, அதிமுக என்ற கொள்ளைக் கும்பலின் தலைவி, தமிழ்ச் சமூகத்தையே ஊழல்படுத்தி, தமிழ் மக்களை சுயமரியாதையும் சொரணையும் இல்லாத கையேந்திகளாக மாற்றி, அவர்களுடைய வாக்குகளை விலைபேசி வாங்க முடிகிறதே, இந்த நிலைமையை மாற்றுவதெப்படி என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் திரளின் வலிமை கொண்டே, இந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்பதும், இந்தக் கொள்ளைக்காரியைத் தண்டிப்பதும் எப்படி- என்ற கோணத்தில்தான் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி என்பது, இந்த அரசுக் கட்டமைவின் தோல்விக்கு ஒரு சான்று. இந்தக் கட்டமைவுக்கு வெளியே, மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளைக் கட்டியமைப்பதும், அவற்றின் மூலம் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பதும்தான் இதற்குத் தீர்வு.
kovai-admk-alattal-1
இதய தெய்வம் மாளிகை(கோவை அதிமுக தலைமையகம்) முன்பு சாலையை மறித்து ஆட்டம் போடும் கொள்ளைக்காரி கட்சியின் அடிமைகள்
கோவை அ.தி.மு.க கொண்டாட்டம்
இதய தெய்வம் மாளிகையிலிருந்து வெளியே வந்த செ ம வேலுசாமி முன்னாள் மேயர் ஊடகங்களுக்கு 500 ரூபாய் கட்டு ஒன்றை கொடுத்ததையும் அதை அவர்கள் நடு ரோட்டில் நின்று கொடுத்ததை நேரடியாக பார்க்க முடிந்தது. ஊடகங்கள், நீதித்துறை எல்லாவற்றுக்கும் விலை உண்டு.! (வேலுசாமி காரின் பின்னாடி அமர்ந்திருக்கிறார்)
kovai-admk-alattal-2
கோவை செ.ம.வேலுசாமி ஊடகங்களுக்கு நேர்காணல் – கவருக்கு முந்தைய காட்சி!
புகைப்படங்கள்: பு.மா.இமு, கோவை.
 vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக