Officers called to a flat on Tuesday after neighbours became concerned found Shigi Rethishkumar, 37, and her girls Niya and Neha, 13, dead inside.
The body of Shigi’s husband, Pullarkattil Rethishkumar, 44, was found yesterday near a nearby reservoir.
கேரளாவை சேர்ந்த ரெதிஷ்குமார் (வயது 44) என்பவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது மனைவி ஷிகி (37) சமூக சேவைகள் செய்து வந்தார். இவர்களுக்கு இரட்டையர் மகள்கள் நேஹா, நியா (13) இருந்தனர். கிழக்கு லண்டன் வல்தம்ஸ்டோ பகுதியில் இவர்கள் வசித்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. புகாரின்பேரில் ஸ்காட்லாந்து போலீசார், வீட்டுக்குள் புகுந்து பார்த்தபோது ஷிகி, நேஹா, நியா ஆகியோர் கொல்லப்பட்டும், ரெதிஷ்குமார் தற்கொலை செய்தபடியும் பிணமாக கிடந்தனர்.
பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்த போலீசார், மனைவி மகள்களை கொன்ற ரெதிஷ்குமார் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக