திங்கள், 4 மே, 2015

பார்வதி : சான்ஸ் கிடைத்தாலும் அவசரப்பட மாட்டேன் !

பூ படத்துக்கு பிறகு சென்னையில் ஓர் நாள், மரியான் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருப்பவர் பார்வதி. உத்தம வில்லன் படத்தில் கமல் மகளாக நடித்திருக்கிறார். அவர் கூறியது:ஆரம்ப கட்டதிலேயே பெரிய படத்தில் கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். இதன் மூலம் எனக்கு நடிக்கத் தெரியும் என்று பலரும் உணர்வார்கள். இந்த வேடத்தை நஸ்ரியாவால் செய்ய முடியுமா என்று இனி யாரும் என்னைபார்த்து சந்தேகப்பட முடியாது. அதற்காக டெஸ்ட் ஷூட்டும் தேவையிருக்காது. தற்போது கன்னடத்தில் வாஸ்கோட காமா, மலையாளத்தில் குஞ்சக்கோ போபன் நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். மேலும் பட வாய்ப்புகள் தற்போது வந்திருக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து மெதுவாகவேத்தான் நடிக்க ஒப்புக்கொள்வேன்.இவ்வாறு  பார்வதி கூறினார் - See more at: /tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக