புதன், 13 மே, 2015

ஜெயலலிதா பதவி ஏற்பில் குழப்பம்! பம்முகிறது அதிமுக வட்டாரம்! பன்னீரு கேவி கேவி அழுதுகிட்டிருக்காரோ?

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, விடுதலை பெற்றதை அடுத்து, ஐந்தாவது முறையாக, முதல்வர் பதவி ஏற்கவிருக்கிறார், ஜெயலலிதா. எந்த தேதியில், அவரது பதவியேற்பு என்பது பற்றி குழப்பமான தகவல்கள், அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.>கடந்த 2011 தேர்தல் வெற்றிக்கு பின், மே 16ம் தேதி, அவர், நான்காவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு, செப்., 27ம் தேதி பதவி இழந்தார். தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக, அவர் மீண்டும் பதவியேற்க தகுதி பெற்றுள்ளார்; அதனால், அவர் ஐந்தாவது முறையாக பதவியேற்கும் நாளை குறிப்பதில், ஜோதிடர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறது. வரும் 17ம் தேதி, அமாவாசை தினம் என்பதுடன், தற்போதைய ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு துவக்க நாள் என்பதாலும், அந்த நாளில், அவர் பதவியேற்கக் கூடும் என, முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது, 'அந்த நாள், ஜெயலலிதாவுக்கு உகந்த நாள் அல்ல' என்ற தகவல் சொல்லப்பட்டு உள்ளது; 17 என்றால், கூட்டுத்தொகை எட்டு வருகிறது; அது, அவருக்கு ராசியற்ற எண் என்பதால், 17ம் தேதி பதவியேற்பு இருக்காது என்கிறது, ஆளுங்கட்சி வட்டாரம்.
அதே நேரத்தில், வரும் 16ம் தேதி, அவர் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, முதலில் கூறப்பட்டது.

இப்போது, கடந்த முறை அவர் இதே தேதியில் தான் பதவியேற்றார்; அது நிலைக்கவில்லை என்பதால், அந்த தேதியில் பதவியேற்பு நடத்த வேண்டாம் என, யோசனை சொல்லப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த இரு தேதிகளுக்கும் இடைப்பட்ட, 15ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, பதவியேற்பு நடத்தலாமா என்பது குறித்து, போயஸ் தோட்டத்தில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு பின், பதவியேற்பு தேதி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


குழப்பம் நீடிப்பு:

ஜெயலலிதா, வழக்கிலிருந்து விடுதலையானதும், உடனடியாக முதல்வராவார் என, எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், அதற்கான ஆயத்தப் பணிகள், உடனடியாக துவக்கப்படவில்லை. நேற்று, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என, தகவல் பரவியது; ஆனால், கட்சி சார்பில், எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு செல்லவில்லை. ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், கட்சி தலைமையில் இருந்து, எப்போது வேண்டுமானாலும், அழைப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்புடன், சென்னையில் முகாமிட்டு உள்ளனர். தீர்ப்பு வெளியான நாளிலும், அதற்கு அடுத்த நாளிலும், ஜெயலலிதா, கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட யாரையும் பார்க்கவில்லை. சந்தோஷ நிகழ்வுகள் என்றால், போயஸ் தோட்டத்தின் வாசலுக்கு வந்து, தொண்டர்களுக்கு உற்சாகமாக கையசைத்து செல்வது வழக்கம். பத்திரிகையாளர்களையும் சந்தித்து, வெற்றி குறித்து கருத்து பரிமாறி செல்வார். ஆனால், இப்படி வழக்கமாக நடப்பது எதுவுமே, கடந்த இரு நாட்களாக நடைபெறவில்லை. இதெல்லாம் கட்சியினரிடம், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் தேதி முடிவான பிறகே, முதல்வர் பன்னீர்செல்வம் பதவி விலகல்; எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் போன்றவை நடைபெறும் என, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் -தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக