ஞாயிறு, 10 மே, 2015

திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று அதிமுக ஆடிப்போய் இருப்பது உண்மையா? விகடன் கழுகார் அப்படித்தாய்ன்......

‘மதுரையில் அழகிரியும், பி.ஆர்.பி-யும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கடந்த 6-ம் சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் வீட்டுத் திருமண நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு பி.ஆர்.பி சென்றிருக்கிறார். அவர் அங்கே சென்ற சற்று நேரத்தில் அழகிரியும் உள்ளே வந்திருக்கிறார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘போன்ல பேசுங்க!’ என்று சொல்லிவிட்டு அழகிரி கிளம்பிவிட்டாராம். அந்தக் காட்சிகள் இப்போது வாட்ஸ்அப்பிலும் வலம் வருகின்றன.’’
‘‘தி.மு.க-தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றனவே?”
‘‘இந்த விஷயத்தில் அ.தி.மு.க கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. உளவுத் துறை அதிகாரிகளோ, ‘தி.மு.க-வினர் திட்டமிட்டு தமிழ்நாடு முழுக்க கருத்துக்கணிப்பில் வாக்களித்​துள்ளனர். அவர்கள் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துவதுபோல அ.தி.மு.க கவனம் செலுத்துவது இல்லை. அ.தி.மு.க-வின் ஐ.டி விங்க்கில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அதற்குள் வேறு யாரும் நுழைய முடியாதபடி முட்டுக்கட்டை போடுவது இரண்டு அமைச்சர்கள்தான். அவர்களின் வாரிசுகளை அதில் நுழைக்க வேண்டும். அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் அந்த விங்க் வர வேண்டும் என்பதால் ஒட்டுமொத்தமாக அந்த அமைப்பையே முடக்கி வைத்திருக்கிறார்கள்!’ என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே நடவடிக்கை இருக்கும்!’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார், ‘‘நான் அவசரமாக கிளம்ப வேண்டும். வாட்ஸ்அப்பில் இரண்டு தகவல்கள் அனுப்புகிறேன்”விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக