செவ்வாய், 12 மே, 2015

என் 58 ஆண்டுகால அனுபவத்தில், இது போன்ற ஒரு தீர்ப்பை நான் பார்த்ததில்லை! அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா

பெங்களூரு: "தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து, தீர்ப்பளித்துள்ள தீர்ப்பின் பிரதி கிடைக்கும் வரை, இது தொடர்பாக, எதையும் கூற முடியாது,” என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர், ஜெயமஹால் எக்ஸ்டென்ஷனில் உள்ள தன் அலுவலக இல்லத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தீர்ப்பின் பிரதியை முற்றிலுமாக படிக்காமல், எதையும் கூறுவது சாத்தியமில்லை. எதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம், இந்த தீர்ப்பை அளித்தது என்பது தெரியவில்லை. வழக்கு தொடர்பான, அனைத்து சாட்சிகளையும் தாக்கல் செய்துள்ளோம். இவைகளை பரிசீலித்து, சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 27ம் தேதி அளித்த உத்தரவில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் தரப்பு வாதத்தை ரத்து செய்துவிட்டு, புதிய அரசு வழக்கறிஞரை நியமித்து, எழுத்துபூர்வ வாதத்தை எடுத்துரைக்க கூறியது. ஒரு நாள் அவகாசத்தில், என்னை, கர்நாடக அரசு நியமித்தது. கூடுதல் அவகாசம் கொடுத்திருந்தால், அரசு தரப்பு வாதத்தை எடுத்து கூறுவதற்கு, வசதியாக இருந்திருக்கும். இந்த வழக்கை, பொறுத்த வரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வாதம், முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.காசு பணம் துட்டு மணி காசூ  பணம்
அரசு வழக்கறிஞர் வாதம் என்பது இல்லை. இது ஒரு தலைபட்சமாக எடுத்து கொண்டதாக, நான் கருதுகிறேன். உச்ச நீதிமன்றம், 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதை, 6 மாதமாக நீட்டித்திருக்கலாம். என், 58 ஆண்டுகால அனுபவத்தில், இது போன்ற ஒரு தீர்ப்பை நான் பார்த்ததில்லை. அனைத்து ஆதாரங்களுடன் சிறப்பு நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டு, அங்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு, நேர்மாறாக, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, என்னை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருந்தாலும், தீர்ப்பை, நான் மதிக்கிறேன். தீர்ப்பின் நகல், என் கையில் கிடைத்தவுடன், அதை படித்து விட்டு, கர்நாடக அரசுக்கு, என் கருத்தை தெரிவிப்பேன். கர்நாடக அரசு இறுதியாக முடிவு செய்யும். பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் செல்வதற்கு முழு அதிகாரம் உள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல், கையில் கிடைத்த, 90 நாட்களுக்குள், உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம். இந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக பணியாற்றிய பவானிசிங் மீது, எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதால், மீண்டும் முதல்வராகலாமா? என்ற கேள்விக்கு, கருத்து கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக