செவ்வாய், 7 ஏப்ரல், 2015

பெண் பத்திரிகையாளர் நடிகை மாயாவினால் தாக்கப்பட்டார்! Flashback ஜெயாவுக்காக தற்கொலை டிராமா ஆடிய ex கவர்ச்சி .....


சென்னையில் பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நடிகை மாயா மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர் பெயர் மனோஹாரி என்பதாகும். இவர், ஜெயப்பிரியா முரசு என்ற பத்திரிகையில் சப் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார். பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்... நடிகை மாயா மீது புகார் சாலிகிராமத்தில் வசித்து வரும் மனோஹாரியின் வீட்டருகே நடிகை மாயா வசித்து வருகிறார். நேற்றைய தினம் பணி முடிந்து வீடு திரும்பிய மனோஹாரியின் வீட்டருகே மாயாவின் கார் நிறுத்தப்பட்டிருந்ததாம். தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு இடமில்லை என்று கூறியதற்கு நடிகை மாயா தரக்குறைவாக பேசினாராம். பேச்சுவார்த்தை முற்றவே மனோஹாரியை நடிகை மாயாவும் அவரது மகனும், மகளும் அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதில் முகத்தில் காயமடைந்த மனோஹாரி நடந்த சம்பவம் பற்றி விருகம்பாக்கம் காவல்நிலையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்... நடிகை மாயா மீது புகார் நடிகை மாயா தனது பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை போடுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே இவர், தனது நடிகை சீதாவுடன் தகராறு செய்து அந்தப் பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக