வெள்ளி, 17 ஏப்ரல், 2015

சிருஷ்டி டாங்கே மட்டும்தான் ஒரே ஒரு dimple நடிகையாம்! எனக்குள் ஒருவன், டார்லிங் படங்களில் நடித்திருப்பவர்

யுத்தம் செய், எனக்குள் ஒருவன், டார்லிங் படங்களில் நடித்திருப்பவர் சிருஷ்டி டாங்கே. இவர் ‘நவரச திலகம்’ படம் மூலம் காமெடி ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஆனந்த் ஹீரோ. ராஜ்கபூர், பூபதி பாண்டியன் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காம்ரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியது: நண்பர்கள் என்ற பெயரில் நம்மை சுற்றி இருப்பவர்களில் ஒருசிலர் நவரசத் திலகங்களாக இருப்பார்கள். அப்படியொரு நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் கதை. கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்கு இசை அமைத்த சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் அவரே இசை அமைக்கிறார். ரமேஷா ஒளிப்பதிவு. சுதர்சன வெம்புட்டி, ஜெயசந்திரன்ராவுடன் இணைந்து தயாரிக்கிறார்.பொள்ளாச்சியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. திருச்சி, கும்பகோணத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக