செவ்வாய், 7 ஏப்ரல், 2015

Chennai ஆசிரியை Jerina கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் பிடிபட்டார்


மாடம்பாக்கம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ரேணுகாம்பாள் நகர் 1வது மெயின் ரோட்டில் நேற்று முன்தினம் காலை ஒரு பெண் கொலை செய்யப்பட்டு மழைநீர் கால்வாயில் வீசப்பட்டிருந்தார். இதுகுறித்து, சேலையூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் தெரிய வந்ததாவது: பழைய வண்ணாரப்பேட்டை உய்யாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகள் ஜெரினா மரியா (27). சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெரினா மரியா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, கொருக்குபேட்டை போலீசில் அல்போன்சா புகார் செய்தார்.
இந்நிலையில், ஜெரினா மரியா கொலை செய்யப்பட்டு கிடந்தார் என தெரிந்ததும், அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை பார்த்து ஜெரினா மரியாவின் தாயார் அல்போன்சா அடையாளம் காட்டினார். ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரது சகோதரர் உடலை பார்த்து அது ஜெரினா மரியாதான் என உறுதி செய்தார். மேலும் விசாரணையில், ஜெரினா மரியாவை, அவரது நெருங்கிய உறவினர் அழைத்து சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. ஜெரினா மரியாவின் தூரத்து உறவினர் ஹென்றி ராபர்ட் (35) பிபிஏ பட்டதாரி. சில ஆண்டுகளுக்கு முன் மனைவியை விவாகரத்து செய்தார்.

பேஸ் புக் மூலம் ஜெரினா மரியாவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின், உறவினர் என தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்த ஹென்றி ராபர்ட், அவ்வப்போது செலவுக்கு ஜெரினா மரியாவிடம் பணம் வாங்கி செலவு செய்துள்ளார். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என ரூ.18 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை கேட்டு ஜெரினா மரியா அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். வேளச்சேரியில் ஜெரினா மரியாவின் சகோதரிக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று, பணம் தருவதாக வேளச்சேரியில் இருந்த ஜெரினா மரியாவை, வேளச்சேரியில் உள்ள அவரது சகோதரி நிலத்துக்கு வரவழைத்தார். அங்கு சென்ற அவர், தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த ஹென்றி ராபர்ட், அவரை சரமாரியாக தாக்கி, ஜெரினாமரியாவின் கைகளை கட்டினார். மற்றொரு கயிறால், அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் சடலத்தை அங்கேயே போட்டு விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு காரில் சென்ற, ஹென்றி ராபர்ட், சடலத்தை காரில் எடுத்து கொண்டு புறப்பட்டார். மாடம்பாக்கம் ரேணுகாம்பாள் நகரில், ஆள்நடமாட்டம் இல்லாததை பார்த்து, அங்கிருந்த மழைநீர் கால்வாயில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் தலைமறைவாகி விட்டார் என ஹென்றி ராபர்ட் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கின்றனர் dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக