வியாழன், 2 ஏப்ரல், 2015

நைஜீரியா போர்க்கொடி? பாஜக அமைச்சர் கிரிராஜின் கருப்பு இனபெண்கள் பற்றிய இனவாத பேச்சுக்கு எதிராக

ராஜீவ் காந்தி, ஒரு நைஜீரியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தால், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அந்தக் கட்சி ஏற்றுக் கொண்டிருக்குமா என்று கூறிய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு நைஜீரியா தூதர் பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ராஜீவ் காந்தி ஒரு நைஜீரிய பெண்ணை (கறுப்பின பெண்ணை) திருமணம் செய்து கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சி அவருக்கு தலைவர் பதவியைத் தந்திருக்குமா" என கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இந்நிலையில், கிரிராஜ் சிங்கின் இந்த கருத்துக்கு நைஜீரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த்துவாவில் ஊறிய இனவாதிகளிடம் இருந்து இந்த மாதிரி அழுக்குகளைதான் எதிர்பார்க்க முடியும்
இது குறித்து டெல்லியில் இந்தியாவுக்கான நைஜீரியா தூதர் பொறுப்பை வகிக்கும் ஓ.பி. ஓகங்கர் கூறுகையில், "அமைச்சரின் கருத்து விரும்பத்தக்கதல்ல. மிக மோசமானது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்வோம்.
அமைச்சர் தனது கருத்தை திரும்பப்பெறுவார்; நைஜீரியா மக்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்க்கிறோம். இது குறித்து எங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்புவோம்"  என்று கூறியுள்ளார் tamil.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக