அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்துக்கு
முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தியிருக்கும் பார்ப்பன
சிவாச்சாரியர்களின் வழக்கு 8 வருடங்களாக தூங்கிக் கொண்டிருந்தது. அதன்
மீதான விசாரணை இப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பார்ப்பன ஜெயா அரசோ, அறநிலையத் துறைக்கு எதிராக நடக்கும் வழக்கில் அறநிலையத் துறை அதிகாரிகளை அனுப்பாமல் சதி செய்து வருகிறது.
உச்சிக் குடுமி மன்றத்தின் யோக்கியதை பற்றி ஜெயா சொத்து குவிப்பு வழக்கு, சிதம்பரம் தில்லைக் கோயில் வழக்கு ஆகியவற்றில் நாம் அறிந்தது தான். எனினும், உச்சிக் குடுமி மன்றத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தமிழக மக்களுக்கு சுயமரியாதை ஊட்டும் விதமாகவும் 21-4-2015 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள், “சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா?” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட முழக்கத் தட்டிகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ம.உ.பா.மையத்தின் தோழர் வாஞ்சிநாதன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். “தாலி என்பது இந்துக்களின் அடையாளம் என்று பேசும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ், சிவசேனா கும்பல் ஏன் இந்த அர்ச்சகர் மாணவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை?. ஏனெனில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சாமி சிலையைத் தொடக் கூடாது, தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்ற மனுநீதி அவர்களது.
மேலும், இந்த வழக்கில் நாங்கள் தோற்றால் பார்ப்பன ஜெயா அரசும், உச்சநீதிமன்றமும் தான் காரணம். உச்சநீதிமன்றத்தில் தோற்றால் நாங்கள் வீதியிலிறங்கி எங்கள் போராடத்தைத் தொடர்வோம்” என்று அவர் பேசினார்.
துண்டறிக்கை வினியோகம்

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் அரங்கநாதன் பேசும் போது, “ஆகம விதிகளைத் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் கற்றுள்ளோம். ஆனால் எங்களுக்கு பணியாணை வழங்கவில்லை, தமிழக அரசு. நாங்கள் வேலை வேண்டும் என்று மட்டும் போராடவில்லை, சூத்திரன், பஞ்சமன் என்னும் பார்ப்பன இழிவுக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டம், சுயமரியாதை உணர்வை தட்டியெழுப்பும் விதமாக இருந்தது.
பெரியார் காலத்தில், தான் பார்ப்பான் என்று சொல்லவே அஞ்சினார்கள். அந்த அளவுக்கு சுயமரியாதை கொண்டிருந்தது தமிழகம். ஆனால், இன்றோ பார்ப்பனக் கூட்டம் பெரியார் திடலுக்குள் நுழையவும், பெரியார் படத்தை செருப்பால் அடிக்கவும் துணிந்திருக்கிறதென்றால் என்ன அர்த்தம். தமிழன் சுரணை அற்றவன் என்பது தானே!.
ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்த ஆரிய-பார்ப்பனக் கூட்டம் சாதி என்ற பெயரில் நம்மை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்தியது. இன்றும் அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது. “நாம் இந்து” என்று நம்மை ஏமாற்றப் பார்க்கிறது இந்த நயவஞ்சகக் கூட்டம்.
நாம் எல்லாரும் இந்து என்றால், நம்மை கோயிலுக்குள் விடச் சொல்வோம், அர்ச்சகர் உரிமையைத் தரச் சொல்வோம். முடியுமா? முடியாது. பார்ப்பனக் கூட்டத்தின் நயவஞ்சகத்தை இனியாவது உணர்வோம். சுயமரியாதை உணர்வோடு போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்.
பார்ப்பன பாம்புகளையும், அதன் குட்டிகளான இந்து மதவெறி அமைப்புகளையும் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, சுயமரியாதையை மீட்டெடுக்க தமிழக மக்களை போராட்டக் களத்திற்கு அழைக்கிறோம்.
பார்ப்பன அடிமைத்தளையை அறுத்தெறிவோம், பெரியார் பிறந்த மண் என் நிரூபிப்போம்.
-பு.ஜ. செய்தியாளர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக