திங்கள், 20 ஏப்ரல், 2015

அவன் ஏன் அற்புதம் ஏதும் நிகழ்த்தவில்லை ?

ஏதோ ஒரு காரணத்தால் அந்த  அதிகப்பிரசங்கிக்கு தான் யார்? இறந்த பின்பு
எங்கே போகிறோம் ? கடவுள் என்று உண்மையில் ஏதாவது ஒன்று உண்டா என்பது போன்ற உதவாக்கரை கேள்விகள் அடிக்கடி எழுந்துகொண்டே இருந்தன . புரிந்தும் புரியாமலும் பல பல நூல்களை படிப்பது பலவிதமான குருஜிக்கள் போன்றவர்களின் தத்துவங்கள் எல்லாம் ஓரளவு நுனிப்புல் மேய்ந்து பார்த்தான் ,
ஒரு சமயம் ஏதோ விளங்குவது போலவும் மறுபடி ஒன்றுமே புரியாமலும் காலங்கள் கழிந்தன.
சம்பவம் நடந்த அன்று அவன் வேலை முடிந்து அருகில் இருந்த ரயில் நிலையத்தில் வழக்கம்போல காத்திருந்தான் ,
மனம் ஏராளமான கேள்விகளை கேட்டுகொண்டே இருந்தது .
Not This Not This என்று மனம் காணும் பொருட்களை எல்லாம் மனத்தால் தூக்கி எறிந்து கொண்டிருந்தான் , இதுவும் எங்கேயோ அவன் படித்த ஒரு தியான மார்க்கம்தான் , நான் யார் என்ற கேள்விக்கு நான் இதுவா ? அல்ல இது என் உடம்பு , அப்படியானால் நான் என்று எண்ணி கொண்டிருக்கும் மனம்தான் அந்த நானா ? இல்லை இல்லை அது உன் மனம், இப்படியாக கை கால் விரல்கள் மற்றும் காணும் எல்லாவற்றையும் இது நானா ? என்று கேள்விமேல் கேள்வியாக கேட்டு அவை ஒன்றுமே நான் அல்ல Not This not this நாட் திஸ் என்று கேள்வியும் பதிலும் எல்லையில்லாமல் தொடர்ந்து கொண்டே சென்று இறுதியில் கேட்பதற்கு கேள்விகளே இல்லாமல் போய்விட்டது அப்பொழுது அந்த நான் யார் என்று கேட்பதற்கு அவனுக்குள்ளே அந்த அது எங்கோ காணமல் போய் விட்டது .
அவனே அவனை காணாது ஒரு திரிசங்கு நிலையில் நின்றான் .
கேள்விகள் கேட்பவர் காணாமல் போய்விட்டார்,
கேள்விகளையும் காணவில்லை பின் பதில்கள் மட்டும் எப்படி வரும் ,
ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது .

ஆனால் இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு அற்புதமான Automated mechanism இருக்கின்ற படியால் என்று நினைக்கிறேன் அவன் தன்னை பற்றிய எந்த உணர்வும் இன்றியே ரயிலில் ஏறி உட்கார்ந்தான் ,
எங்கும் ஒரே எல்லையில்லாத மகிழ்ச்சி போன்ற ஆனால் நிச்சயமாக அதை உலகியல் வார்த்தைகளில் மகிழ்ச்சி என்றும் கூற முடியாது , ஏதோ ஒரு எல்லையில்லாத ஆனந்தம் போன்ற நிலை என்று வேண்டுமென்றால் வைத்து கொள்ளலாம் .
ரயிலில் ஏனைய பயணிகள் ஏறுகின்றனர் இறங்குகின்றனர் ரயிலும்  நிலையங்களில் நின்று நின்று செல்கிறது .
எல்லா காட்சிகளும் மிகவும் துல்லியமாக வெளிப்படையாக தெரிகிறது , எங்கும் தானே நீக்கமற நிறைந்திருப்பதும் உணரக்கூடியதாக இருக்கிறது ,
இதை எல்லாம் அவனுக்கு உணர வைக்கும் அவனது மனம் மிக மிக low profile இலில் இடை இடையே மெதுவாக எட்டி பாரத்த ஒரே காரணத்தால் தான் அவனால் பின்பு இந்த அனுபவங்களை விளக்க கூடியதாக இருக்கிறது .
சேர வேண்டிய ரயில் நிலையம் வந்தது ஜன நெரிசலில் அவன் மெதுவாக நடக்கும் பொழுது அந்த ஜனக்கூட்டம் அவனை சுற்றி வழி விட்டு நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு வேளை அவன் ஒரு உயற்ற இயந்திரம் போல் நடந்து கொண்டிருந்ததால் எதோ ஒரு வித்தியாசம் அவர்களை அப்படி விலகி செல்ல தூண்டியிருக்கலாம் ,
அவன் அறையை போய் சேர்ந்த பொழுது சுமார் இரவு பத்து மணி இருக்கும் , மாலை ஐந்து மணிக்கு அவன் ஒரு தேநீர் அருந்தியிருந்தான் அதன் பின் ஒன்றுமே புசிக்கவில்லை .
அவனுக்கு இப்போது பசி தாகம் என்ற சமாச்சாரங்கள் எல்லாம் தெரியாது , பசி என்று எண்ணினால் அவனே பசியாக மாறிவிடுவான் அதற்கு உரிய உணவை நினைத்தால் அவனே உணவாகவும் மாறிவிடுவான் ,
அவன் வேறு அவன் காணும் இந்த உலகம் வேறு அல்ல , எதையும் எண்ணிய உடனேயே அவனே அதுவாக ஆகிவிடும் அற்புத தருணம் எந்த மொழியிலும் நிச்சயமாக விளங்க படுத்த முடியாது ,
அவனால் தற்போது எதுவும் முடியும் , அவனே இந்த பிரபஞ்சமாக இருக்கிறான் , எதுவும் அடையும் அல்லது செய்யும் ஆற்றல் அவனுக்கு இருந்த போதும் அவன் எதையுமே செய்ய இல்லை .
ஏன் அவன் எந்த சித்தி அல்லது அற்புதம் அதாவது miracle எதையும் நிகழ்த்தவில்லை ?
தங்கத்தை எண்ணிய உடனே அவனே தங்கமாகி விடுகிறான் , பின் அவனுக்கு ஏன் தங்கம்?
எந்த தேவையும் இல்லாத போது அங்கு என்னதான் இருக்கும் ? ஒன்றுமே இருக்காது , ஒன்றுமே இல்லாவிடில் அது என்ன நிலை ?
அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் அவனது மனம் திடீரென மீண்டும் ACTIVATE  ஆனது , உயர பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று land ஆனது மாதிரி அவனது மனம் உடலுக்குள் புகுந்து கொண்டது ,
மனமானது உடலின் driving seat இல் உட்கார்ந்ததும் அவனக்கு முதலில் தெரிந்த reaction கண்கள் எரிந்தது தான் ,
சுமார் பத்து மணித்தியாலங்களாக அவனது கண்கள் அசையவில்லை மின்ன வில்லை ,
கண்களே மனதின் வாசல் மனம் மாயமாகி போனபின் கண்களும் தம்மை மறந்துவிட்டன போலும் ,
கண் எரிச்சல் ஒரு புறம் வயிற்று பசி ஒரு புறமும் ஒரு மாதிரி மீண்டும் இருட்டில் எழுந்து சென்று எதோ கைகளில் பட்டத்தை எடுத்து கடித்து விட்டு குழாய் நீரையும் குடித்து விட்டு மீண்டும் படுத்துவிட்டான் ,
காலை எழுந்த பின்புதான் அவனுக்கு எல்லாமே புரிய தொடங்கியது ,
நல்ல காலம் அவனது மனம் இடை இடையே தலை காட்டி காட்டி மறைந்ததால் கொஞ்சமாவது அவனுக்கு ஞாபகம் இருக்கிறது ,
அந்த ஞாபகத்தை வைத்து அவன் மீண்டும் முயற்சி செய்து பார்த்து கொண்டீயிருக்கிறான்,
அந்த பிரபஞ்ச ரகசியம் அன்று ஏதோ அதிஷ்ட லாபசீட்டு போல அவனுக்கு வைத்தது பின்பு இதுவரையில் மீண்டும் அவனுக்கு தெரியவே இல்லை ,
ஓ இது எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு அற்புத தருணத்தில் தெரிய தான் போகிறது இன்றோ நாளையோ அல்லது நாளை மறுநாளோ தெரிவது நிச்சயம்,
இப்போதெல்லாம் இந்த உலகம் அவனுக்கு வேறு மாதிரி தெரிய தொடங்கிற்று,
அவன் முன்பெல்லாம் சதா எதாவது ஒரு குருஜி அல்லது ஆத்மீக நூல்கள் என்று அலைபாய்ந்து கொண்டிருப்பான் ,
இப்போ அவனுக்கு நன்றாக இந்த உலகம் பிடித்து விட்டது ,
சுவர்க்கம் என்பது இதுவும் தான் என்ற கருத்து அவனுள் உருவாகிற்று ,
அது மட்டுமல்ல இந்த உலக சஞ்சாரம் இந்த முறை பூர்த்தியான பின்பும் வரப்போவதும் அற்புதமான உலகம் தான் என்றும் அவனுக்கு தோன்றியது

அதற்காக இதை இழப்பதோ அல்லது
இதற்காக அதை இழப்பதோ வெறும்  பித்தலாட்டம் என்று அவன் தற்போது சொல்லி கொண்டிருந்தான் ,
எல்லாமே அற்புதம்தான்.
அவனது இந்த மாற்றங்களை அவனது பூர்வாசிரம நண்பர்கள் அதாவது பக்தர்கள் அல்லது ஆன்மீக தேடல்வாதிகள் அதிகம் ரசிப்பதில்லை
எம்மையெல்லாம் கொண்டு போய் சேர்த்துவிட்டு இப்போ இவன் ஏதேதோ எல்லாம் பேசுகிறான் ,
சில வேளைகளில் நல்ல புத்தி சுவாதினத்துடன் பேசுகிறான் சிலவேளைகளில் லூசு போன்று பேசுகிறான் என்று பிறர் மட்டுமல்ல அவனும் கூட அப்படி நினைப்பதுண்டு , radhamanohar.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக