புதன், 1 ஏப்ரல், 2015

டாப்சி:சிவப்பு என்பது ஒரு அழகு இல்லை!

கிரைண்டர் விளம்பரம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்த டாப்ஸிக்கு சினிமா சான்ஸ் அடித்தது. திரையுலகில் பிக் அப் ஆகி நெம்பர் 1 இடத்துக்கு போய்விடலாம் என்று கணக்கு போட்டவருக்கு எண்ணம் ஈடேறவில்லை. பல மொழிகளில் நடித்து வருகிறார். ஆனாலும் முன்னணி இடத்துக்கு இன்னும் வரவில்லை. நடிப்பை நம்பி விளம்பர படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவந்தார். இதனால் புதுமுகங்களாக வந்த நடிகைகள் விளம்பர தூதருக்கான இடத்தை பிடித்துக்கொண்டனர். சினிமாவை மட்டும் நம்பி விளம்பர பட வருமானத்தையும் இழந்துவிட்டோமே என்று ஆதங்கத்தில் இருந்தவருக்கு சிவப்பழகு கிரீம் விளம்பரம் ஒன்றில் நடிக்க சமீபத்தில் வாய்ப்பு வந்தது. ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வாய்ப்பை தக்க வைத்தார்.இதுபற்றி அவர் கூறும்போது,‘இதுவரை நான் சிவப்பு அழகு கிரீம் விளம்பரத்தில் நடித்ததில்லை. பயன்படுத்தியதும் கிடையாது. சிவப்பு என்பது ஒரு அழகு கிடையாது. ஆனால் அதற்கு பெண்களிடம் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது. விளம்பர படங்களில் நடிப்பது என்பது நடிகைகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகிவிட்டது. ஏனென்றால் அதுதான் டிவியில் விளம்பரமாக வீட்டுக்கு வீடு சென்று நடிகைகளை அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது'  என்றார். - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக