செவ்வாய், 21 ஏப்ரல், 2015

ஒரின சேர்க்கை கணவரால் சித்ரவதை: எய்ம்ஸ் பெண் டாக்டர் தற்கொலை பேஸ்புக் மூலம் தெரியவந்தது

Dr Priya Vedi was married to Dr Kamal Vedi five years back and her message on Facebook revealed that she was mentally tortured by her husband and never had any physical relationship with himடெல்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல்  (எய்ம்ஸ்) மருத்துவமனையை சேர்ந்த 31 வயது  டாக்டர் ஒரின சேர்க்கை கணவரால் சித்ரவதை செய்யபட்டு உள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் இந்த விவரம் அவரது பேஸ் முக் மூலம் தெரியவந்தது. பிரியா வேதி (வயது 31) எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் ஓட்டலில்  கையை அறுத்து  தற்கொலை செய்து கொண்டார். பிரியா வேதி தனது பேஸ் புக்கில் 4 பக்க தற்கொலை கடிதம் ஒன்றை பதிவு செய்து இருந்தார்.. அதில் தனது கணவர் ஒரின சேர்க்கை பழக்கம் உடையவர் என்றும் அவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு மன ரீதியாக கொடுமை படுத்தியதாகவும்  கூறி உள்ளார். இதை தொடர்ந்து போலீசார் பிரியா வேதியின் கணவரை கைது செய்தனர். பிரியா வேதியின் கணவரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டராவார்.  மேலும் அந்த கடிதத்தில் டாக்டர் பிரியா வேதி கூறி இருப்பதாவது:-
எனக்கும் எனது  கணவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.  ஆனால் இதுவரை எந்த திருமண பந்தமும் ஏற்படவில்லை.நாங்கள் இதுவரை உடல் ரீதியா இணையவும் இல்லை.  அவரது லேப்டாபில் அவர் போலி இமெயில் ஐடி மூலம்  பலவேறு ஓரின சேர்க்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்வார்.இது தெரிந்தும் மனைவி என்ற வகையில் நான் அவருக்கு உதவி செய்து வந்தேன்.ஆனால் அவர் என்னை மனவேதனை படுத்தி வந்தார்.கடந்த இரவில் அவர் என்னை உணர்வு பூர்வமாக மிகவும் கொடுமை படுத்தினார்  என்னை  மூச்சு விட முடியாமல் செய்தார்.

நீ ஒரு மனித ஜென்மம் கிடையாது நீ ஒரு பிசாசு என்னிடம் இருந்து எனது உயிரை எடுத்து கொண்டாய்” என அந்த கடிதத்தில் பிரியா வேதி கூறி உள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

பிரியா எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டராவார். ஞாயிற்று கிழமை காலை ஓட்டல் அறையில் அவர் பிணமாக கிடந்த விவரம் தெரிய வந்த்து. கடந்த சனிக்கிழமை பிரியாவின் கணவர்  மனைவியை காணவில்லை என புகார் அளித்து உள்ளார். என கூறினார். dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக