வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சுருதி ஹாசனின் பிரச்சனையால் விஜயின் புலி படத்துக்கு தடைவருமா?


சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகா மோத்வானி நடித்துவரும் திரைப்படம் புலி. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் புலி படக்குழு, படப்பிடிப்பு நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறது. விஜய் படங்களுக்கு வழக்கமாகவே சில பிரச்சனைகள் வரும். ஆனால் இம்முறை புது டெக்னிக்காக பிரச்சனை உண்டாகியிருக்கிறது. புலி படத்தில் விஜய்யின் ஒரு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் தான் இந்த பிரச்சனையின் காரணகர்த்தா. என்ன பிரச்சனை என்பதை படத்தின் தயாரிப்பாளர்களே விளக்கமாக கூறியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதாவது “PVP நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால், ஸ்ருதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் புதிய படத்திற்கு சென்றுவிட்டார் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது.


புலி திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தலக்கோணம் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் 150 பேருக்கும் மேலானோர் இரண்டு மாதம் பணிபுரிந்து காடும், ஏரியும் சங்கமிக்கும் இடத்தில் இந்திய திரையுலகில் யாரும் பார்த்திராத வகையில் கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் இந்தப் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவதால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டியது வரும். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பும் நஷ்டமும் ஏற்படும் என்று எங்கள் கஷ்டத்தை தெரிவித்தோம். அதை புரிந்துகொண்டு இறுதிகட்டத்தில் ஒரு படம் நின்றுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ‘புலி’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர். 

PVP நிறுவனத்தின் மீது நேரடி புகாரை கொடுத்திருக்கும் புலி பட தயாரிப்பாளர்கள், இவர்களால் புலி திரைப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டால் எங்களுக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்படும் என்றனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக