புதன், 8 ஏப்ரல், 2015

வசூல் பல ஆயிரம் கோடி ரூபாய் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டில் பதுக்கல்: இளங்கோவன்!

அதிமுக அமைச்சர்களின் லஞ்ச வசூல் பல ஆயிரம் கோடி ரூபாய் இடைப்பாடி வீட்டில் பதுக்கல்: இளங்கோவன் தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, வருகிற தொகை முழுவதும் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் புதன்கிழமை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சி லஞ்சத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக அரசின் பல்வேறு அமைச்சகங்களில் லஞ்ச வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் நடத்துகிற வசூல் வேட்டை முழுவதையும் அதிமுக தலைவிக்கு கப்பம் கட்ட வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறார்கள். கப்பம் கட்டுவதில் ஒரு பங்கை சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எடுத்துக் கொள்வதற்காகத் தான் கொத்தடிமை அரசியலை நடத்தி வருகிறார்கள்.    இதுதாண்டா புதிய டப்பிங்  படம் கொள்ளைக்காரியும்   கொத்தடிமைகளும்!
தமிழக அமைச்சர்கள் தங்கள் துறைகளில் வசூல்வேட்டை நடத்தி, வருகிற தொகை முழுவதும் சேலம் 5 ரோடு பகுதி கண்ணகி தெருவில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் வருகிற சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் பகுதி மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து வருமான வரித்துறையும், தேர்தல் கமிஷனும் இடைப்பாடி பழனிச்சாமி வீட்டை உடனடியாக சோதனையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் தான் அவரது செல்வாக்கு அமைச்சரவையில் பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இவ்வாறு கூறினார். nakkheeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக