ஞாயிறு, 5 ஏப்ரல், 2015

ஈரான்- அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம்: ஒபாமா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ஈரானுடன் அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தம் சுமூகமாக முடிந்துவிட்டது. இதற்கு அமெரிக்க மக்கள் பேராதரவு தர வேண்டும்என அதிபர் ஒபாமா கூறினார். அமெரிக்காவின் இந்த முயற்சி பேரழிவை உண்டாகும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஈரானும்,இஸ்ரேலும் எதிரிகள் என்பது உலகறிந்த விஷயம். இந்நிலையில் ஈரானுடன் அணு ஒப்பந்தம் செய்து அமெரிக்கா சுமூக தீர்வினை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக சுவிடர்சலாந்தில் நடந்த மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரியும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவியத்தும் சந்தித்து பேசினர்.


இதையடுத்து , அணு திட்டம், அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்காவிடம், ஈரான் சரணடைந்தது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்த இப்பிரச்னையில் சுமூகமாக தீர்வு எட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் அதிபர் உறுதி

ஈரான் அதிபர் ஹுசைன் ரவுகானிகூறுகையில், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம், அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் எங்கள் உறுதிமொழியை என்றும் காப்போம் . சர்வதேச சமூகத்திற்கு ஒத்துழைப்போம் என்றார்.

இது குறித்து நேற்று வானொலி மற்றும் சமூக வலைதளம் வாயிலாக அதிபர் ஒபாமா பேசுகையில் , ஈரானுடனான ஒப்பந்தம் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டுவிட்டது. இதில் நல்ல முன்னேற்றம் நட்புறவும் ஏற்படும் என உறுதியளிக்கிறேன்.இதனை அமெரிக்க மக்கள் மற்றும் காங்கிரசும் (அமெரிக்க பார்லிமென்ட் ) ஆதரவு தர வேண்டும் என்றார்.

இஸ்ரேல் எச்சரிக்கை

அமெரிக்காவின் இந்த ஒப்பந்தத்தினை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகூ கூறுகையில், ஈரானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதன் மூலம் ஐ.எஸ். படைகளை வீழ்த்திட அதிபர் ஒபாமா அமெரிக்கர்களையும், பார்லி. உறுப்பினர்களையும் சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். இது பேரழிவை தான் உண்டாக்கும். ஈரானின் அணு ஆயுத திட்டத்தை விற்பனை செய்வதே ஒபாமாவின் அடுத்த வேலை. இவ்வாறு பெஞ்சமின் நெத்தன்யாகூ கூறினார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக