தீஸ்தா சேதல்வாத்
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முதல் பாகம்.
கேள்வி
குஜராத் முஸ்லீம் இனப்படுகொலை நடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அன்றைய குஜராத் முதல்வர் மோடி இன்று நாட்டின் பிரதமர். அவரது வலது கையான அமித் ஷா இன்று பா.ஜ.க தேசியத் தலைவர். சிறையிலிடப்பட்ட மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் வன்சாரா, பிற போலீஸ் அதிகாரிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மதச்சார்பின்மை மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் தோல்வியா? அல்லது நீதிமன்றம், ஊடகங்கள் அடங்கிய இந்த அரசமைப்பின் தோல்வியா?

தீஸ்தா சேதல்வாத்
இரண்டும்தான். பாசிசத்திற்கு எதிரான போராட்டம் நீதிமன்ற வழக்குகளாக மட்டும் குறுக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. 2002 எதை குறிக்கிறதோ அதற்கான எதிர்ப்பு மக்கள் மத்தியில் கட்டியமைக்கப்படாமல் ஒரு அடையாள நடவடிக்கையாக, எதிர்க் கட்சிகளின் தேர்தல் அரசியலுக்கு தேவைப்படும் போது மட்டும் நடக்கிறது.
அந்த வகையில், இது அனைத்து மதச்சார்பற்ற சக்திகளின் தோல்வி. உலகெங்கிலும் உள்ளது போல உரிமைகள் எழுத்தில் இருந்தாலும், அரசியல் சட்டத்தில் தரபபடடிருநதாலும், மககள் அதற்காக போராடாமல் அநத உரிமைகளை நடைமுறையில் பெற முடியாது.
நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, நாம் சாதிய அடிபபடையிலான, மத அடிபபடையிலான, முழுவதும் ஜனநாய‍கப்படுததப்படாத இந்த அமைபபின் கதவுகளை தொடர்நது தடட வேணடும். சான்றாக அரசியலமைப்பின் பிரிவு 21, “சட்டத்தின் முன் அனைவரும் சம‍ம்” என்கிறது. ஆனால், நீதிமனறததிற்கு போகாமல் அநத உரிமையை வெனறெடுகக முடியாது.
குஜராத்தை பொறுத்தவரை தேசிய மனித உரிமைகள் ஆணையததின் அறிக்கை மற்றும் அக்கறையுளள குடிமக்கள் தீர்ப்பாயததின் அறிக்கை ஆகியவறறில் நீதிபதிகள் எஙகளைப் போனற செயல்பாட்டாளர்கள் கூறுவதை உறுதிபடுததியிருககினறனர். இல்லையெனில் உச்ச நீதிமன்றம் வெகு காலததிற்கு முன்பே எஙகள் வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கும்.
கேள்வி
நீதிக்கான இந்த போராட்டத்தின் தற்போதைய பின்னடைவுகளுக்கு முதன்மையான காரணம் மோடி அதிகாரததுககு வநத‍தா? அலலது இநத அமைபபு, தான் கடைப்பிடிப்பதாக்க் கூறிக் கொணட அறஙகளை கைவிடடு வருகிறதா?
தீஸ்தா சேதல்வாத்
மோடி அதிகாரததுககு வநததுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலுககு 3 மாதஙகளுககு முன்பு குஜராத் உயர்நீதிமனறம் மாயா கோத்னானிககு பிணை வழஙக மறுதது விடடது. பெரும்பான்மை பலததுடன் புதிய அரசு பதவியேறறபிறகு அதே நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருக்கிறது.
அதற்கு எதிராக, பாதிககப்பட்டவர்களும், சி.ஜே.பி.யும் (நீதி மறறும் அமைதிககான குடிமக்கள் அமைபபு) ஒரு பொதுநல வழககு மூலமாக உசசநீதிமன்றததில் மேல் முறையீடு செய்தோம். உயர்நீதிமன்றம் பிணை வழங்கியதோடு மட்டுமல்லாமல், தண்டனையையும் குறைத்திருந்தது. “விசாரணை நடத்தாமல் எப்படி தண்டனையை குறைக்க முடியும்” என்று அந்த விசித்திரமான உத்தரவை நாங்கள் கேள்விக்குள்ளாக்கினோம். இது தலைமை நீதிபதி தத்து மற்றும் 2 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி தத்து அரசியல்வாதிகளுக்கு பிணை கிடைத்தே தீர வேண்டும் என்று கருதலாம். (அவர்தான் ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியவர்); ஆனால், இந்த வழக்கில் அவர் நடந்து கொண்டது விசித்திரமாக இருந்தது.
“நான் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசி, தண்டனையை எப்படி குறைத்தீர்கள் என்று கேட்டு அதை திருத்தச் சொல்கிறேன்” என்றார் அவர். எங்கள் வழக்கறிஞர், “தொலைபேசியில் பேசுகிறேன் என்கிறீர்களே அதற்கு என்ன பொருள்? இது போல எல்லா வழக்குகளிலும் உயர்நீதிமன்றங்களுக்கு தொலைபேசி உத்தரவுகளை மாற்றச் சொல்வீர்களா” என்று கேட்டார்.
இரவோடு இரவாக, மாயா கோத்னானியின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு உத்தரவை திருத்தக் கோரினர். தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சகாய் உத்தரவை மாற்றிக் கொடுக்கிறார்.
இது சட்ட நடைமுறை அல்ல. முறைப்படி,’தண்டனையை குறைத்த தவறு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்; அதை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும்.’ பிணை வழங்கவே விரும்பினாலும், இதுதான் நடைமுறை. அதற்கு மாறாக இப்படி ஏன் செய்ய வேண்டும்?
இது நடந்தது போது, நாங்கள் இது பற்றி வழக்கமாக அனுப்புவது போல அனைவருக்கும் மின்னஞ்சலில் தகவல் அனுப்பினோம். ஆனால், எதிர்க்கட்சிகள் யாரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.
ஆனால், வலது சாரிகள் தொடர்ந்து நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றனர்; தடை செய்யப்பட்ட விஷயங்களையும் பேசுகின்றனர். ராமர் கோவில் வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது, எனவே அது குறித்து வெளியில் பேசக் கூடாது, ஆனால் அவர்கள் பேசுகின்றனர்.
இவ்வாறு, இந்த வழக்குகளை அரசியல் ரீதியாக துடிப்பாக தொடர்ந்து எதிர்ப்பதில் பிரச்சனை உள்ளது. சட்டபூர்வமான எதிர்ப்பில் நாங்கள் ஈடுபட்டிருப்பதால், எங்களுக்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்கள் தமது குரலை எழுப்பலாம். மற்றவர்கள் பேச நாங்கள் அமைதியாக இருத்தல் என்பதுதான் திட்டமாக இருக்க வேண்டும்.
குஜராத்தோடு தொடர்பில்லாத இன்னொரு உதாரணம் சொல்கிறேன். மோடி சென்ற ஆண்டு நேபாளத்திற்கு சென்றார். ரீடிஃப் இணைய தளத்தில் இது பற்றி ஒரு சின்ன செய்தி வெளியானது.
மோடி பசுபதிநாத் கோவிலுக்கு சென்ற போது, 2,400 கிலோ சந்தன மரம் மற்றும் பல கிலோ சுத்த நெய் வழங்கியிருக்கிறார். இதற்கான மொத்தச் செலவு ரூ 4 கோடி இருக்கும் என பத்திரிகையாளர்கள் மதிப்பிடப்பட்டிருந்தனர். இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள்? பிரதமர்களுக்கு அவ்வளவு பணம் ஏது, அவர்களது சம்பளம் அவ்வளவு கிடையாது. மேலும், ஒரு சுதந்திரமான, மதசார்பற்ற, ஜனநாயக நாட்டின் பிரதமர் இது போன்ற ஒன்றை செய்வது சரியா?
சென்ற இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளில் இந்த கேள்வியை எழுப்பும்படி நான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முயற்சித்து வருகிறேன். அது எழுப்பப்படவில்லை.
கேள்வி
சென்னைக் கூட்டத்தில் பேசும்போது, “நமது அரசியல் சட்டம் என்பது வங்கிக் கையிருப்பு இல்லை; நமக்கு நாமே கொடுத்துக் கொண்ட ஒரு புனித வாக்குறுதி. அரசியல் சட்டம் வழங்கும் மதிப்பீடுகளை மக்கள் மதிக்கும் அளவுக்குத்தான் மதச்சார்பின்மை இந்த நாட்டில்  பிழைத்திருக்கும்” என்று ஜாவித் குறிப்பிட்டார்.
கார்ப்பரேட்டுகளால் திட்டமிடப்பட்டு, மோடி வளர்ச்சி நாயகன் என்று முன்வைக்கப்பட்டுதானே பிரச்சாரம் செய்யப்பட்டது? மோடியின் இப்போதைய வெற்றியை மக்களின் மதச்சார்பின்மைக்குக் கிடைத்த தோல்வியாக பார்க்க முடியுமா?
தீஸ்தா சேதல்வாத்
நம் நாட்டில் தேர்தல் அரசியல் இப்படித்தான் செயல்படுகிறது. மோடிக்கான பிரச்சாரத்தில் மயங்கி பல்வேறு பிரிவினரும் வாக்களித்திருந்தனர்.
மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க தோல்வி அடைந்து விட்டன. அவர்கள், தங்களது குறுகிய நலன்களை ஒதுக்கி வைத்து விட்டு, மோடி அதிகாரத்துக்கு வந்து விடாமல் தடுக்க ஒன்றுபட்டிருக்க வேண்டும்.
இப்போது, ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சித்தாந்தம் இல்லை, முசாஃபர் நகர் பற்றி அவர்கள் பேசவே இல்லை, மதவாதம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லை. சச்சார் குழு அறிக்கை அவர்களுக்கு முக்கியமானது இல்லை. தேர்தல்களுக்கு முன்னர் கெஜ்ரிவால், குஜராத்துக்கு சென்றார், வளர்ச்சி குறித்து பேசினார், ஆனால், 2002 பற்றி குறிப்பிடவேயில்லை.
ஆனால், அதனாலேயே அவர்களை நாம் ஒரேயடியாக ஒதுக்கி விட முடியுமா? நாம் அப்படி ஒரு தூய்மைவாத நிலைப்பாட்டை எடுத்தால் யார் மிஞ்சியிருப்பார்கள். இந்த வெற்றிடம் நிரப்பப்படும் வரை இந்த நிலைமை தொடரும்.
(நேர்காணல் தொடரும்)
நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்