திங்கள், 6 ஏப்ரல், 2015

திருச்சி ஜி.எச்.அதிகாரி டாக்டர் நேரு தற்கொலை முயற்சி...அதிமுக வசூல் வேட்டை அடாவடியால் மன உளைச்சல்?

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ பொறுப்பில் இருந்து வரும் டாக்டர் நேரு திடீரென இன்று அதிகாலையில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் நேரு சமீபத்தில்தான் இப்பதவிக்கு வந்தார். வந்தது முதலே அவருக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் தரப்பிலிருந்து நெருக்கடிகள் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். திருச்சி ஜி.எச். மருத்துவ அதிகாரி தற்கொலை முயற்சி... அரசியல்வாதிகளால் மன உளைச்சல் என தகவல்! பல்வேறு பணி நியமனங்கள், டெண்டர்கள் உள்ளிட்டவற்றில் அவருக்கு கடும் நெருக்கடி இருந்து வந்ததாம். வசூல் வேட்டை அப்புறம் அம்மா போற்றி அம்மாவுக்காக வழிபாடு அன்னதானம்?  என்ன ஜோராக நடக்குது பொம்மலாட்டம்? 
இதனால் டாக்டர் நேரு மன உளைச்சலில் இருந்ததகா சொல்கிறார்கள். இந்த நிலையில், இன்று அதிகாலையில் நேரு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.அடுத்தடுத்து அரசு அதிகாரிகளுக்கு சிக்கல் தமிழகத்தில் அடுத்தடுத்து அரசு அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட தரப்பிலிருந்து சிக்கல்களும், நெருக்கடிகளும் அதிகரிப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே சென்னையில் டாக்டர் அறிவொளி இதுபோன்ற நெருக்கடியால் உயிரிழந்ததாக ஒரு சர்ச்சை வெடித்தது. நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி அரசியல் மற்றும் அதிகார நெருக்கடியால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more a/tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக