திங்கள், 27 ஏப்ரல், 2015

சந்திரபாபு நாயுடுவுக்கு அதிக செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள்! யாரைப்பார்த்து பயமோ?

ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு கட்டமாக சுமார் ஐந்தேகால் கோடி ரூபாய் விலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய குண்டு துளைக்காத பஸ் ஒன்றை ஆந்திர மாநில அரசு வாங்கியுள்ளது. அடிக்கடி, மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்துவரும் சந்திரபாபு நாயுடு, இந்த பஸ்சில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவருக்கு தேவையான முழு பாதுகாப்பும் கிடைக்கும். அதேவேளையில், இதுபோல் இட வசதியுள்ள பஸ்சில் அமர்ந்தவாறு சம்பந்தப்பட்ட மாவட்ட வளர்ச்சி பற்றி அம்மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திராவை உலுக்கிய ஹுட் ஹுட் புயலின்போது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடச் சென்றபோது, சுமார் ஒருவார காலம் அங்கு முகாமிட்டிருந்த சந்திரபாபு நாயுடு பஸ்சில்தான் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மாலைமலர்com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக