சனி, 18 ஏப்ரல், 2015

பூஜாகுமார் - பழைய பாணி நடிப்பு இப்போ எடுபடாது !

10 வருடத்துக்கு முந்தைய நடிப்பு, இப்போதைய டிரெண்டில் எடுபடவில்லை என்றார் பூஜா குமார்.விஸ்வரூபம், உத்தமவில்லன் படங்களில் கமலுடன் நடித்திருப்பவர் பூஜா குமார். அவர் கூறியது:எனக்கும் தண்ணீருக்கும் ஸ்பெஷல் கனெக்‌ஷன் இருக்கிறது என்று நினைக்கிறேன். 13 வயதிலேயே நீர்நிலைகளில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். தற்போது ஸ்கூபா டைவிங் கற்றிருக்கிறேன். முதலில் இதை கற்க நடுக்கமாகத்தான் இருந்தது. பிறகு பயம் தீர்ந்தது. நடிப்பு உள்ளிட்ட இதுபோன்ற கலைகளில் என்னை ஈடுபட வைத்தது என் அம்மாதான்.
10 வருடத்துக்கு முன் அவர் கார் விபத்தில் பலியானபோது என் வாழ்வில் பெரிய இழப்பாக அமைந்துவிட்டது.சினிமா இப்போது ரொம்பவே மாறி இருக்கிறது. கடந்த 10 வருடத்துக்கு முன்பு நடிப்பு பள்ளியில் கற்றது இப்போது பொருத்தமாக இல்லை. திரையுலகில் போட்டி அதிகரித்துவிட்டது. தொடர்ச்சியாக திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது முக்கியம். எந்தவகையான கதாபாத்திரம் செய்வது என்பதில் தெளிவாக இருந்தால் வயது என்பதெல்லாம் வெறும் நம்பர்தான். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக