வியாழன், 16 ஏப்ரல், 2015

ராகுல் வீடு திரும்பினார் .வந்துட்டான்யா வந்துட்டாய்ன்யா! இனி காங்கிரஸ் கோவிந்தா கோவிந்தா?

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுப்புக்குப் பிறகு இந்தியா திரும்பினார். இன்று காலை 11.15 மணியளவில் தாய் ஏர்வேஸ் மூலம் பாங்காங்கிலிருந்து அவர் டெல்லி வந்து சேர்ந்தார்.
முன்னதாக, காலை 10.45 மணிக்கு விமானம் வருவதாக இருந்தது. ஆனால், 40 நிமிடங்கள் விமானம் தாமதமாக வந்தடைந்தது.
இதற்கிடையில், காலை 11 மணிக்கே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்குச் சென்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், கடந்த பிபரவரி 23-ம் தேதியன்று ராகுல் காந்தி இந்தியாவில் இருந்து புறப்பட்டார். கட்சிப் பணிகளில் இருந்து சிறிது நாள் ராகுல் விலகியிருப்பார் என்று மட்டுமே தெரிவித்த காங்கிரஸ் மேலிடம் அவர் எங்கு சென்றார், எதற்காக சென்றார், எப்போது திரும்புவார் என எவ்வித தகவலையும் அளிக்கவில்லை. நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம்ல? அது என்ன இருண்ட பக்கமோ யார் அறிவார் ? இது சரி வராது! கட்சிக்கும் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் ஊஹும்ம்ம்ம்ம்  

இதனால், ராகுல் காந்தியைக் காணவில்லை, ராகுல் எங்கே என்றெல்லாம் போஸ்டர் முதல் சமூக வலைத்தளங்கள் வரை விமர்சனங்கள் வெளுத்து வாங்கின.
பாஜகவும் விட்டு வைக்கவில்லை, காங்கிரஸ் கட்சி நிலச் சட்டத்தில் இல்லாத குற்றத்தை ஆராய்வதைவிட நாட்டிலிருந்து காணாமல் போன தங்கள் கட்சி துணைத் தலைவரை தேடட்டும் என கிண்டலடித்தது.
இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் போன்றோர் "ராகுல் எங்கிருக்கிறாரோ அங்கு பத்திரமாக இருக்கிறார்" என்பது போன்ற அவ்வப்போது சில அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இந்நிலையில், அவர் பாங்காங்கில் இருந்து வந்த விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார்.
வரும் 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் பேரணியில் அவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக