ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

தாலி இந்து பெண்களுக்கு எதிரானது ! மதிமாறன் பேட்டி!

இந்து மக்கள் தாலியை புனித மாகக் கருதுகின்றனர். அவர்களை காயப்படுத்தும் வகையில் தாலிக்கு எதிரான இந்தப் போராட்டம் தேவையா?
வே. மதிமாறன்:
முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தி.க தலைவர் வீரமணி அறிவிதிருப்பது தாலி அறுக்கும் போராட்டமல்ல; தாலி அகற்றும் போராட்டம். பெரியார் கொண்டு வந்த திருமண முறை என்பது இந்தியாவிலேயே யாரும் செய்யாத சிறப்பான திருமண முறை. இதில் புரோகித மறுப்பு, பார்ப்பன எதிர்ப்புப் போன்றவற் றைத் தாண்டி முக்கியமான பங்கு என்ன வென்றால் பெண்ணு ரிமை சார்ந்து இருப்பது.
இந்துக்களின் திருமண முறை என்பது முழுக்க முழுக்கப் பெண் களுக்கு எதிரான திருமண முறையாக இருக்கிறது என்பதால் இதனை மாற்றவே சுயமரியாதை திருமண முறையைப் பெரியார் கொண்டு வந்தார்.
சுயமரியாதைத் திருமண முறைகளை மூன்று விதமாகப் பெரியார் பிரிக்கிறார். சுயமரியாதைத் திருமணத்தில் பாதி என்று பெரியார் எதைச் சொல்கிறார் என்றால்… அய்யர் இல்லாமல் ஒரே சாதிக் குள் செய்து கொள்ளும் திருமணத்தை பாதிச் சுயமரியாதைத் திருமணம் என்று ஏற்றுக் கொள்ளலாம்
என்கிறார். இதேபோல, அய்யரை வைத்து இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் இதையும் பாதி அளவுக்கான சுயமரியாதைத் திருமணமாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
அடுத்து, அய்யரும் இல்லாமல் வெவ்வேறு சாதியைச் சேர்ந்த வர்கள் (சாதி மறுப்பு) திருமணம் செய்து கொள்வதை முழுமை யான சுயமரியாதைத் திருமணம் என்கிறார் பெரியார்.
மூன்றாவதாக ஒன்றைச் சொல் கிறார் பெரியார். அது புரட்சிகரத் திருமண முறை! இந்தப் புரட்சிகரத் திருமண முறையில் அய்யரும் கிடையாது. எந்த மத அடையாளத்தோடும் திருமணம் செய்யக் கூடாது. அது இந்து மதம் என்று கிடையாது; இஸ்லாம், கிறிஸ்தவம் உட்பட எந்த மதப்படியும் செய்யாமல் தாலியும் கட்டாமல் நடக்கிற திருமணம்தான் புரட்சிகரத் திருமணம் என்கிறார் தந்தை பெரியார்.
ஆக, கட்சிக்குள் வருபவர்கள் எல்லோருமே பெரியாரின் இந்தக் கண்ணோட்டத்தில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. கட்சிக்குள் வருபவர்கள், பெண் எடுக்கும் இடத்தில் (சாதி மறுப்புத் திருமணமாக இருந்தாலும்) தாலி மட்டும் கட்டணும் என்று சொல் கிறார்கள் என்று வருவார்கள். சுய மரியாதை திருமணத்தில் தாலி கட்டும் நிகழ்ச்சி மட்டும் சில வேளை நடக்கும்.
இப்படித் தாலி கட்டி சுயமரியா தைத் திருமணத்தை நடத்தி விட்டு, அதன் பின் தாலி கட்டுவது என்பது பெண்ணை அடி மைப்படுத்துவது என்று தன் மனைவிக்கு அதைப் புரிய வைப்பது! பெரியார் எந்தக் கருத்தையும் சொல்வார். ஆனால் ஏற்றுக் கொள்ளச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார். அதுதான் அவருடைய ஜனநாயகம்!
மனைவிக்குப் புரிய வைத்து அவரின் சம்மதத்தோடுதான் தாலியை அகற்ற வேண்டும். பெண்ணின் சம்மதமில்லாமல் செய்தால் அது பெண்ணடிமைத்தனமாக, பெண் மீதான வன்முறையாக மாறிவிடும்.
அதனால், தாலியைக் கட்டி திருமணம் செய்து கொள்ளச்சொல் லும் பெரியார் அதன் பின், தாலி என்பது எவ்வளவு இழிவானது, உன்னை அடி மைப்படுத்தத்தான் ஆண் கட்டுகிறான் என்பதை அந்தப் பெண்ணுக்கு புரிய வைக்கச் சொல்கிறார்.
அந்தப் பெண், ஆமாம்… இது அடிமைப்படுத்துதல்தான் என்று புரிந்து இந்தத் தாலி தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்த பின்னர் அதே சுய மரியாதை திருமணம் செய்து கொண்டவர்கள் இன்னொரு மேடையில் ஏறி, தான் கட்டிக் கொண்ட இந்தத் தாலி எனக்கு வேண்டாம்; இது அடிமைத்தனம் என்று அவிழ்த்துப் போடுவதற்குப் பெயர்தான் தாலி அகற்றும் விழா.
இது அந்தப் பெண்களே முழுச் சம்மதத்தோடு செய்வது. தன் மனைவியே ஆனாலும் கருத்தை திணிக்கக் கூடாது என்பது பெரி யாரின் கொள்கை.
பெண்கள் தாலி கட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்; அதை அகற்ற முடியாது என்று சண்டை போடுகிறார்கள் என்றால் அதை அப்போதைக்கு விட்டு விடு! அவர்களுக்குத் தொடர்ந்து புரியவை! அவர்கள் என்றைக்குப் புரிந்து கொள்கிறார்களோ அன்றைக்கு அழைத்து வந்து தாலி அகற்றும் விழாவை நடத்திக் கொள். இதை த்தான் பெரியார் சொல்கிறார். தாலி அகற்றும் விழா இதுதான். இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை!
தாலி அகற்றும் விழாவில் மிக அதிகபட்சமாகப் பெண்ணுரிமை, பெண்களுக்கான சுதந்திரம், பெண்ணியக் கருத்துதான் முதன் மையானது. அதனால்தான் தாலி கட்டக் கூடாது என்ற கருத்து டையவர் இத்தனை நாட்கள் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழ்ந் திருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு புரிய வைத்திருக்கிறார்.
ஒருவரை கொள்கை சார்ந்து மாற்ற வேண்டுமே தவிர வன்மு றையால், பிடிவாதத்தால் மாற்றக் கூடாது என்பதுதான் பெரியா ரின் கொள்கை.
14ம் தேதி நடக்கும் தாலி அகற்றும் விழாவை அய்யா வீரமணி தன் கட்சியில் உள்ளவர்களுக்காகத்தான் நடத்துகிறார் என்பது கூடப் புரியாமல் இந்துப் பெண்களின் தாலியை எல்லாம் அறுக்கி றார்கள் என்று பொய் பேசி திசை திருப்புகிறார்கள்.
இது இந்துப் பெண்களுக்கு எதிரானது அல்ல; தாலி கட்டிக் கொள்வதுதான் இந்துப் பெண்களுக்கு எதிரானது.  mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக