வெள்ளி, 24 ஏப்ரல், 2015

CM விக்னேஸ்வரன் பிரேமானந்தாவின் சிஷ்யர்களை விடுவிக்க மோடியிடம் கோரிக்கை?

இலங்கை வடமாகாண முதலமைச்சர்  ஜஸ்டிஸ் விக்னேஸ்வரன் பிரேமாந்தா சாமியாரின் சிஷ்யர் ஆவார். இவர் தற்போது  பிரேமானந்தாவுடன் கொலை கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களில் நிருபிக்கப்பட்டு சிறையில் உள்ள அவரது நான்கு சிஷ்யர்களையும் விடுவிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். ப்ரோடோகோல் ஒன்றை பற்றியும் கொஞ்சம் கூட கவலை படல , அவர்கள் செய்த குற்றம் எப்படி பட்டது என்று இவருக்கு தெரியும் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்  தமிழ் மாகான முதல்வராக தெரிவு செய்யப்பட்டவர். சதா சிங்கள அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி வகுப்பு எடுக்கும் இந்த போலி மனிதர் தற்போது தன்னை தெரிவு செய்த மக்களின் கௌரவத்தை பற்றி எள்ளளவும் கவலைபடாமல் பயங்கர சமுக விரோதிகளுக்காக துடிக்கிறார். அவர்களின் ஆச்சிரம நிர்வாகத்தை கவனிக்க இந்த கிரிமினல்களின் விடுதலை அவசியமாம், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.
< மேலும், கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பி்ரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.’ ரைம்ஸ் ஒவ் இந்தியா இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தா, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு புதுக்காட்டை நீதிமன்றத்தினால் இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.
திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் உள்ள ஆசிரமத்தில் 13 பெண்களை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியது, மற்றும் ரவி என்பவரைக் கொலை செய்து ஆசிரமத்துக்குள் புதைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. எனினும், 2011ம் ஆண்டு பிரேமானந்தா பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு, கூடலூர் சிறையில் இறந்து விட்டார்.
இவரது உதவியாளர்களான கமலானந்தா, பாலன், சதீஸ் ஆகிய மூவரும், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேமானந்தா ஆசிரமத்தில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும், 13 பெண்களுமே ஈழத் தமிழர்களாவர்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனையில் பிரேமானந்தா குற்றவாளியென நிரூபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பிரேம்குமார் என்ற இயற்பெயர் கொண்ட பிரேமானந்தா இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் பிறந்தவர். inioru.com 
COLOMBO: Northern Province Chief Minister C.V.Wigneswaran may have broken protocol when he officially wrote to Indian Prime Minister Narendra Modi requesting him to consider releasing four Sri Lankan Tamils sentenced to life imprisonment in the 1994 Premananda rape and murder case, Lankan officials told Express.
A Foreign Ministry official said that as per protocol, the Chief Minister should send his letter to the Foreign Ministry first. The Foreign Ministry will, in turn, send it to the destination through the Foreign Ministry of the country concerned.
However, in the case of the Northern Province Chief Minister this diplomatic  route is not insisted upon these days because of the close relations existing between Lanka and India, he added. The protocol is not uniformly applied.
“And, at any rate, the Northern Chief Minister has written to Modi in the past, without any objections from Colombo,” the official pointed out.
In his official letter dated March 14, 2015, Wigneswaran told Modi that he was forwarding documents sent by one K.Sivathy, daughter of R. Kamalananda, convict No: 4220.
“Since the girl’s father and mother hail from our (Northern) province, I take the liberty of forwarding the said documents for your kind consideration. Mr.Ram Jethmalani who is known to me, is fully aware of the false case filed,” Wigneswaran said.
The documents, addressed to Modi, were signed by immediate family members of the convicts R. Kamalananda; S. Balendra; S. Sathishkumar; and S. Nandakumar.
They convicts’ relations claimed that a “travesty of justice” had taken place. And with the Indian Supreme Court confirming the sentence, release had  become  “impossible”.
Pleading for Modi’s good offices to get them released, they said: “ Our dear ones have been in prison for more than 20 years now. The best years of their lives are gone and our lives have also been affected very much. It might be noted Sir, that they are not convicted for any positive act of crime but for abetment only.”newindianexpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக