புதன், 1 ஏப்ரல், 2015

நாளைசுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: காய்கறி, மளிகை பொருள் விலை உயரும்! ரெயில்வே பிளாட்பாரம் டிக்கெட்டு இனி பத்து ரூபா!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 18 சுங்கச் சாவடிகளில் (டோல்கேட்) நாளை முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆம்னி பஸ்கள், சரக்கு வாகன கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலைகள் படுமோசமாக உள்ள நிலையில் சுங்கச் சாவடிகள் கட்டணம் உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 234 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், வசூல் செய்யும் உரிமை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன.


இதில், 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும் 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் இரண்டாண்டிற்கு ஒரு முறை வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பரில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், ஆம்னி பஸ், டாக்சி, சரக்கு வாகனங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நாளை முதல் தமிழகத்தில் சூரப்பட்டு(திருவள்ளூர்), வானகரம் (திருவள்ளூர்), பரனூர்(விழுப்புரம்), ஆத்தூர்(சேலம்), கிருஷ்ணகிரி, சாலைபுதூர் (தூத்துக்குடி), பள்ளி கொண்டான்(வேலூர்), வாணியம்பாடி(வேலூர்), எட்டூர் வட்டம்(நெல்லை), கப்பலூர்(நெல்லை), நாங்குநேரி(நெல்லை), புதுக்கோட்டை, சிட்டம்பட்டி(திருச்சி), பூதக்குடி(மதுரை), லெம்பலாக்குடி(சிவகங்கை), லட்சுமணப்பட்டி(சிவகங்கை), ஸ்ரீபெரும்புதூர்(காஞ்சிபுரம்), சென்னசமுத்திரம்(காஞ்சிபுரம்) ஆகிய 18 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி காருக்கு ரூ.75லிருந்து ரூ. 85 ஆகவும், லாரி, ஆம்னி பஸ் ரூ.144லிருந்து ரூ.165 ஆகவும் உயருகிறது. இதனால், மீண்டும் சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 இதனால் காய்கறி, மளிகை பொருள்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ' நாடு முழுவதும் 352 சுங்கசாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தின் 18 உட்பட 40 சதவீத சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டண உயர்வுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றார். சுங்கச் சாவடி கட்டண உயர்வு குறித்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘ஏற்கனவே தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். லாரி ஓட்டுனர்களிடம் சுங்கச் சாவடிகள் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை விட அதிகமாக தான் தற்போது வரை கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இது குறித்து கேள்வி கேட்டால் எந்த முறையான பதிலும் தருவதில்லை. வட மாநிலங்களிலிருந்து லாரிகள் மூலம் உணவு பொருட்கள், வாகனங்கள், இரும்பு தாது உள்ளிட்டவை கொண்டுவரப்படுகிறது. இந்த வரைமுறை யற்ற கட்டண உயர்வு. - See more at: /tamilmurasu.org/I

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக