புதன், 1 ஏப்ரல், 2015

நரசிம்மராவுக்கு நினைவிடம் ! சங்பரிவாருக்கு நரசிம்மராவ் மீது அப்படி என்ன அக்கறை?

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவருக்கு தில்லியில் யமுனை நதிக் கரையில் உள்ள ஏக்தா ஸ்தலில் நினைவிடம் கட்டுவதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்ட நிலையில், அவர் மறைந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே இடத்தில் நினைவிடம் கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, ஆந்திர அரசின் முன்மொழிவை ஏற்று, அமைச்சரவைக் குறிப்பை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. 1991 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பிரதமராகப் பதவி வகித்த நரசிம்ம ராவ், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தத்தின் முன்னோடியாவார். 2004ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு, அவருக்கு நினைவிடம் கட்டுவதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது.நரசிம்மராவ் ஒரு இந்துத்வாவாதி  தெலுங்கு பிராமணர்  அயோத்தி விடயத்தில் அத்வானி சப்போர்டார் என்று சந்தேகிக்க பட்டவர் இப்ப அது நிருபணம் ஆச்சு? இந்த பூனை வெளியே வர இவ்வளவு காலமாச்சு! 
இடப் பற்றாக்குறை காரணமாக, தலைவர்களுக்கு பொது நினைவிடம் ஒன்றை அமைக்க முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. அதன்படி, யமுனை நதிக் கரையில் 22.56 பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள "ஏக்தா ஸ்தல்' என்னும் இடத்தில், நரசிம்ம ராவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தனdinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக