திங்கள், 6 ஏப்ரல், 2015

நாக்பூர் 55 மாணவிகளை நான்கு ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 ஆசிரியர்கள் கைது


revealed that out of the 359 girls studying at the school, nearly 45 to 50 girls had told her that they have been molested by these teachers.நாக்பூர் - கடந்த நான்கு ஆண்டுகளாக ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த 3 ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவில் அகோலா மாவட்டத்தில் பாபில்கவ் என்ற இடத்தில் தனியார் உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இங்கு படிக்கும் மாணவிகள் கடந்த 27ம் தேதி மாநில பெண்கள் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. கையெழுத்து இல்லாமல் வந்த அந்தக் கடிதம் தொடர்பாக மாநில பெண்கள் குழு உறுப்பினர் விசாரணை மேற்கொண்டனர். உறைவிடப் பள்ளிக்கே நேரடியாகச் சென்று மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர் ஆஷா மிர்கே மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் 55 மாணவிகள் சித்ரவதை செய்யப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவிகளை மானபங்கப்படுத்திய ராம் சந்த், சைலேஷ்ராம்டேக், சந்தீப் லட்கர் ஆகிய 3 ஆசிரியர்களை கைது செய்துள்ளனர். மாணவிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்த இந்த 3 ஆசிரியர்களில் சைலேஷ் ராம்டேக் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மாநில பெண்கள் ஆணைய உறுப்பினர் ஆஷாமிர்கே கூறியதாவது,  நான் அந்த உறைவிட பள்ளிக்கு சென்று 359 மாணவிகளிடம் பேசினேன். இதில் 55 மாணவிகள் தங்களை 3 ஆசிரியர்கள் அடிக்கடி மானபங்கம் செய்து சித்ரவதை செய்ததாக எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் இந்த இழிவான செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். மானபங்கப்படுத்தியதை வெளியே சொன்னால் சோதனை தேர்வு மதிப் பெண்ணை குறைத்து விடுவதாக 3 ஆசிரியர்களும் மிரட்டி உள்ளனர் என்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. வேலியே பயிரை மேய்வதா என்று பெற்றோர்கள் குமுறிப்போய் இருக்கிறார்கள்
 thinaboomi.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக