புதன், 15 ஏப்ரல், 2015

ஒரு பாட்டுக்கு 5 கோடியில் அரங்கு ! vijay புலி பட பீலா!

விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் முதல் பாடலுக்காக 5 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்கு அமைந்து அதில் படமாக்கி இருக்கிறார்கள்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் விஜய்யோடு நடித்து வருகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக், இசை வெளியீடு, படம் வெளியீடு என எந்த தேதியையும் படக்குழு தீர்மானிக்கவில்லை. முதலில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தீர்மானிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது.

இந்நிலையில், "சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலுக்காக மிகப் பிரம்மாண்டமாக 5 கோடி செலவில் அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்பாடலை திருப்பதிக்கு அருகில் உள்ள தலக்கோணம் பகுதியில் படமாக்கி இருக்கிறார்கள். 200 பணியாளர்கள் இப்பாடலின் அரங்குகளுக்காக இரண்டு மாதங்களாக பணியாற்றி முடித்திருக்கிறார்கள்." என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் 'புலி' தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக