வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அமெரிக்காவில் இந்தியருக்கு 46 ஆண்டு சிறை ! 5 பெண்களை மிரட்டி பாலியல் வன்முறை!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் 5 பெண்களை மிரட்டி கற்பழித்த 36 வயது இந்தியருக்கு 46 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அட்லாண்டா கவுண்ட்டியில் 5 பெண்களை மிரட்டி வரம்பு கடந்த முறையில் செக்ஸ் சேட்டைகளில் ஈடுபட்டதாக இந்தியாவைச் சேர்ந்த ஹிட்டேன் பட்டேல் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். ரகசிய போலீஸ் என்ற அடையாள அட்டையை காட்டி 21 வயது பெண்ணை மிரட்டி, ஒரு வேனுக்குள் ஏற்றி, துப்பாக்கி முனையில் அந்தப் பெண்ணை கற்பழிக்க முயன்றபோது ஹிட்டேன் பட்டேல் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது கையில் இருந்தது போலி துப்பாக்கி என்பதும், அடையாள அட்டையும் போலி என்றும் தெரிய வந்தது. இந்த கைதை தொடர்ந்து, அடுத்தடுத்து மேலும் 4 பெண்கள் ஹிட்டேன் பட்டேல் மீது போலீசில் புகார் அளித்தனர். அவற்றின் அடிப்படையில் அவர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. விபசாரிகளை அழைத்து சென்று அவர்களின் சம்மதத்துடன் நான் உடலுறவு வைத்துக் கொண்டேன். எனவே, இது கற்பழிப்பு ஆகாது என ஹிட்டேன் பட்டேல் கோர்ட்டில் தெரிவித்திருந்தார். எனினும், வேனுக்குள் துப்பாக்கி முனையில் இருந்து தப்பியோடி வந்த பெண் அளித்த வாக்குமூலத்தை மையமாக வைத்து குற்றவாளிக்கு 46 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக