சனி, 18 ஏப்ரல், 2015

தமிழக தெலுங்கு லாபி ஆந்திரா அரசுக்கு சாதகமாக 20 கொலைகளை மூடி மறைக்க ... முதல்வரின் செயலாளர் மோகன் ராவ்( தெலுங்கர் )!

ஆந்திரா  தமிழர்கள் கொலை விவகாரத்தை மூடி மறைக்க, தமிழகத்தில் உள்ள தெலுங்கு லாபி வேலைசெய்து வருகிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வந்த வண்ணம் உள்ளது.   முதல்வரின் செயலாளராக உள்ள ராம் மோகன ராவ் என்பவர் தெலுங்கர்.  ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.   இந்த படுகொலை தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எழுதப்பட்ட  மென்மையான கடிதத்தின் பின்னணியில் இந்த ராம் மோகன ராவே இருக்கிறார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள்.   மேலும், ஐதராபாத்தில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்கள் உள்ளன.  மேலும் ஜெயலலிதாவின் புதிய பினாமி நிறுவனங்களில் ஒன்றான ஹரிசந்தானா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமாரின் கணவர் கே.எஸ்.சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் ஆகியோர் இயக்குநராக இருக்கும் இந்த நிறுவனத்தின் தலைமையகம், ஐதராபாத் நகரில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கும் என்பதை எப்படி எதிர்ப்பார்க்க முடியும் ?


???????????????????????????????ஆந்திர மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவல் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானோரை மரத்தில் கட்டி, கீழே தீ வைத்து உயிரோடு எரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.   பின்னர் அந்த திட்டத்தை மாற்றி, சுட்டுக் கொன்று, தற்காப்புக்காக சுட்டோம் என்ற கதையை பரப்பி வருகிறார்கள்.     இறந்தவர்களில் பலரின் உடலில் தோல் வழன்று, எரிந்த தீக்காயங்களோடு இருப்பதன் காரணம் இதுதான்.   உயிரோடு ஒருவரை எரிக்க முனையும், ஆந்திர காவல்துறையினர் எப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவர்களாக இருப்பார்கள் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
 இதை விட ஒரு மோசமான அவமானகரமான சம்பவத்தை அரங்கேற்றியது பாட்டாளி மக்கள் கட்சி.   இறந்து போனது மொத்தம் 20 பேராக இருந்தாலும், அவர்களில் வெறும் ஆறு பேருக்கு மட்டும், அதாவது அந்த ஆறு பேரும் வன்னியர்கள், அவர்களுக்கு மட்டும் மறு போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.   இந்த சம்பவம் நடந்தது ஆந்திர மாநிலத்தில் என்பதால், இந்த நீதிமன்றத்துக்கு மறு போஸ்ட் மார்ட்டம் நடத்த உத்தரவிட அதிகாரம் இல்லை என்று நீதிபதி கூறியபோது, பாமக வழக்கறிஞர் பாலு, இது மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கூறியுள்ளார்.   மனித உரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் என்றால், ஏன் வெறும் ஆறு உடல்களுக்கு மட்டும் மறு போஸ்ட் மார்ட்டம் கோருகிறீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.   தமிழக அரசு நினைத்தால் மறு போஸ்ட் மார்ட்டம் செய்யலாம் என்று நீதிபதி கோரியபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி நீதிமன்றம் உத்தரவிட்டால் செய்கிறோம் என்றார்.   இணைப்பு .    இந்த ஆறு உடல்களை ஏப்ரல் 17ம் தேதி வரை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட்டார் நீதிபதி.    தமிழகத்தின் முதல்வராகும் கனவோடும், தமிழகத்தின் அரவிந்த் கேஜ்ரிவால் என்று தன்னை கருதிக் கொள்ளும் அன்புமணி ராமதாஸின் கட்சியின் நிலைபாடு இதுதான்.  இவர்கள் என்றுமே வன்னியர் கட்சியாக மட்டுமே இருப்பார்கள் என்பதையே இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.  savukkuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக