வியாழன், 23 ஏப்ரல், 2015

16 வயசு பையன் இனி பாலியல் வழக்குகளில் தப்பிக்கமுடியாது,அது பண்ணினா நீங்க சிறுசு இல்லைங்கோ !

கொடூர குற்றம் புரியும்  16 வயதுக்கு மேற்பட்ட சிறார்களை பெரியவர்களாக கருதி கடும் தண்டனை வழங்க வகை செய்யும் வகையில் சிறார் நீதி சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 18 வயதுக்கு உட்பட்டவர்களை சிறார் என சட்டம் வகைபடுத்தியுள்ளது. இத்தகையவர்கள் எத்தகைய குற்றம் புரிந்தாலும் அவர்களை சிறார் நீதி சட்டத்தின் கீழ் தான் தண்டிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை வழங்க முடியும். மேலும் அவர்களை சிறையில் அடைக்காமல் சிறார் காப்பகத்திலேயே வைக்க முடியும். அண்மைக்காலமாக பலாத்காரம், கொலை போன்ற கொடூர குற்றங்களில் சிறார்கள் கைது செய்யப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு சிறார் சட்டப்படி குறைவான தண்டனையே வழங்கப்படுகிறது. நாட்டை உலுக்கிய நிர்பயா பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் 18 வயது நிரம்பாத சிறுவனும் இருந்தான்.


 மற்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், சிறுவனுக்கு மட்டும் 3 ஆண்டு சிறை தண்டனையே வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. பலாத்கார புகாரில் சிக்கும் சிறார்களை பெரியவர்களாக கருதி வழக்கு தொடர வேண்டும் என பல்வேறு பெண்கள் அமைப்புகள் கோரிக்கை வைத்தன. சிறார் சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது என குழந்தைகள் நல அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் கூறின. சிறார் சட்டத்தில் திருத்தம் தேவையில்லை என நாடாளுமன்ற நிலைக்குழுவும் பரிந்துரை செய்தது. இந்நிலையில் கொடூர குற்றங்கள் புரியும் 16 வயதுக்கு மேற்பட்ட சிறார்களை பெரியவர்களாக கருதி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரும் வகையில் சிறார் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. - See more at:tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக