திங்கள், 16 மார்ச், 2015

பெண் போலீசுடன் சென்னை மாநகர உதவிகமிஷனர் ஆபாசமாக Whatsapp இல் பேசியது அம்பலம்

சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் செல்போனில் ஆபாசமாக பேசி காதல் வலை விரித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செல்போன் வாட்ஸ்–அப்பில் மின்னல் வேகத்தில் ஆடியோவாக பரவி வரும் உதவி கமிஷனரின் ஆபாச உரையாடல்கள் சென்னை முதல் குமரி வரை மட்டுமின்றி வாட்ஸ்–அப் பயன்படுத்தும் அத்தனை பேரின் செல்போன்களுக்கும் கடல் கடந்து சென்று விட்டது.
பெண் போலீசுடன் மிகவும் சூடாக பேசும் கூடுதல் கமிஷனர், 2 குழந்தைகளுக்கு அப்பாவான அவரிடம் நாம் தனியாக வெளியில் செல்லலாம் என்று அழைப்பதுடன், அழகையும் வர்ணிக்கிறார். உரையாடலை முடிக்கும்போது ஒன்னு (முத்தம்) தரட்டுமா? என்றும் கேட்கிறார்.

உதவி கமிஷனரின் இந்த ஆபாச பேச்சு குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வட சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் ரவிக்குமார், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதன் முடிவில் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆபாச உரையாடலில் சிக்கி இருக்கும் உதவி கமிஷனர் 1987–ம் ஆண்டு நேரடி சப்–இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் வேலூர். திருவல்லிக்கேணி, ஜாம்பஜார் போலீஸ் நிலையங்களில் இவர் இன்ஸ்பெக்டராகவும் பணிபுரிந்துள்ளார். சி.பி.சி.ஐ.டி.யிலும் வேலை செய்துள்ளார். தற்போது உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வருகிறார்.
இன்னும் 8 மாதத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். மகன் பல் டாக்டருக்கும், மகள் என்ஜினீயரிங்கும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமண வயதை எட்டியிருக்கும் மகளுக்கு திருமண நிச்சயார்த்தமும் நடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
மகள் படிப்பை முடித்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில்தான் வயதான காலத்தில் உதவி கமிஷனர் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்.
துறை ரீதியான நடவடிக்கைகள் தீவிரமாகி இருப்பதால் உதவி கமிஷனர் மீதான பிடி இறுகியுள்ளது. இதற்கிடையே சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதனால் உதவி கமிஷனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தை பெண்கள் அமைப்பினர் கையில் எடுத்து விட்டால், இன்னும் அசிங்கமாகி விடும் என்றும் போலீஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதற்கிடையே ஆபாச பேச்சு தொடர்பாக உதவி கமிஷனர் மீது புகார் அளிக்கவும் பெண் போலீஸ் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் மட்டத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக