ஞாயிறு, 29 மார்ச், 2015

மன்சூர் அலிகான் பெப்சி FEFSI மாபியாவை உடைக்கிறார்! சீனா ஸ்டன்ட் மாஸ்டரை இறக்குமதி செய்கிறார்


சென்னை,மார்ச் 27 (டி.என்.எஸ்) பெப்சியோடு மோதலில் ஈடுபட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தற்போது, பெப்சி அமைப்பு தொழிலாளர்கள் அல்லாமல், தனது விருப்பப்படி தொழிலாளர்கள் வைத்து 'அதிரடி' படத்தின் படப்பிடிப்பை அதிரடியாக நடத்தி வருகிறார் மன்சூரலிகான்.இப்படத்தில் மன்சூர் அலிகான், மௌமிதா சௌத்ரி (வெஸ்ட் பெங்கால்), சஹானா, பூவிஷா, கவ்யா, காயத்ரி, ராதா ரவி, செந்தில், சிசர் மனோகர் , ஸ்ரீ ரங்கநாதன் ,சங்கர், கிங்காங், நெல்லை சிவா, போண்டாமணி, சுப்புராஜ், மஞ்சப் பை சேகர், நடேசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். செந்தில் படகோட்டியாக நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். மறைந்து கொண்டிருக்கின்ற சிலம்பம், களறி, வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற சண்டைப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் பயில்வானாக கதாநாயகன் மன்சூர். காலையில் இளைஞர்களுக்குப் பயிற்சிக் கொடுப்பவர், மாலையில் சமூக சேவை செய்யும் கதாநாயகனாக மாறுகிறார்.
மதுபானக் கடைகளுக்குச் சென்று குடிப் பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை கேடு விளைவிக்கும் எனக் கூறி அந்தப் பழக்கத்தில் இருப்பவர்களின் காலில் விழுந்து தடுக்கிறார்.

நிஜமான பயில்வானை தேடிப் படமெடுக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு மனசூரலிகானுடைய அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப் போக பயில்வானான மன்சூரலிகானை படத்தின் கதாநாயகனாக ஆக்குகிறார். பயில்வானுக்கு மறைமுக எதிரிகளால் தொல்லை கொடுக்கப்படுகிறது. தயாரிப்பாளரை ஏமாற்றி உடன் இருந்தவர்கள் பணத்தை விரயம் செய்கின்றனர். இதையெல்லாம் முறியடித்து படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தாரா பயில்வான்? எதிரிகளின் சூழ்ச்சி வெல்லப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் கலந்த அதிரடியாகக் கொடுப்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

இப்படத்திற்காக சீனாவிலிருந்து பிரத்தியோகமாக சண்டை பயிற்சியாளர்களை வரவழைத்து படமக்கபடவுள்ளது. மூன்று அதிரடி சண்டைக்காட்சிகளும், பரபரப்பான 2 சேஸிங் காட்சிகளும் படத்தை அதிர வைக்கும் அளவுக்கு இருக்குமாம்.  tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக