செவ்வாய், 10 மார்ச், 2015

Daughter of India வை தடை செய்தது இந்தியாவின் தற்கொலை முடிவு: இயக்குநர் லெஸ்லி உட்வின் பேட்டி

இந்தியாவின் மகள் ஆவணப் படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் லெஸ்லி உட்வின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்ப வத்தை வைத்து பிரிட்டனை சேர்ந்த லெஸ்லி ஆவணப் படம் தயாரித்தார்.
அதில் குற்றவாளிகளில் ஒருவர் பெண்களைப் பற்றி தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பிபிசி-யில் அந்த ஆவணப்படம் வெளி யிடப்பட்டாலும் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.
தடையைத் தொடர்ந்து இந்தியா தவிர மற்ற நாடுகளில் முன்கூட்டியே அப்படத்தை பிபிசி வெளியிட்டது.

இது தொடர்பாக இந்திய அரசு பிபிசி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக லெஸ்லி கூறியுள்ளது:
இந்தியாவில் பாலியல் பலாத் கார சம்பவத்தை அடுத்து மக்கள் மேற்கொண்ட போராட்டத் தையும், அதைத் தொடர்ந்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் உதாரணமாக கொள்ள வேண்டும் என்பதே எனது இந்தியாவின் மகள் ஆவணப்படத்தின் நோக்கம். இப்படத்தின் மூலம் எனது நன்றியை இந்தியாவுக்கு தெரி விக்க விரும்பினேன். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார்கள்.
உலக நாடுகள் தன்னை குற்றம்சாட்ட இந்தியாவே வழி செய்து கொண்டுள்ளது. படத்தை தடை செய்தது ஜனநாயக விரோதம், அரசியல்சாசன சட்டத்துக்கு முரணானது என்பதே சர்வதேச அளவிலான கருத்து.
ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ள பேட்டிகளுக்கு நான் பணம் கொடுத்ததாக இந்திய ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை.
சட்டப்படி உரிய அனுமதி பெற்றுதான் திஹார் சிறையில் உள்ள கொலை குற்றவாளியை பேட்டி எடுத்தேன். அவரது பேட்டி எந்த இடத்திலும் வெட்டப்படவில்லை. இந்திய உள்துறை அமைச்சகம், காவல் துறையின் உரிய அனுமதியுடன், போலீஸார், டாக்டர்கள் முன்னிலையில் குற்றவாளியிடம் அந்த பேட்டி எடுக்கப்பட்டது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக