செவ்வாய், 10 மார்ச், 2015

ராமஜெயம் கொலைகாரர்களை போலீஸ் நெருங்கி விட்டதாம்! ஆனால் ஆறுமாதம் அவகாசம் வேணுமாம்? அவிங்க ஆட்சியோ? அதாய்ன் அவகாசமோ?

முன்னாள் தி.மு.க. அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் மாதம் திருச்சி காவிரி ஆற்றின் கரையில் கை–கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை.
இந்த நிலையில் ராமஜெயத்தின் மனைவி லதா, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமஜெயம் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்றும், அவர்களை கைது செய்ய 6 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 3 மாத கால அவகாசம் அளித்து இந்த விசாரணையை வருகிற ஜூன் மாதம் 11–ந்தேதிக்கு தள்ளிவைத்தார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக