ஞாயிறு, 29 மார்ச், 2015

வீரமணி : இந்துமதத்தை மட்டுமே தாக்குகிறேனா ? இஸ்லாம் கிருஸ்துவ மதங்களை ஏன் தாக்குவதில்லை? பூணுல் ஏன் என்னை அவமதிக்கிறது?

வீரமணி அவர்கள் பதில்களை கச்சிதமாக தெளிவாக பாண்டே மூஞ்சியில் வீசியுள்ளார். பாண்டே பார்ப்பனர்களின், இந்துதத்துவா வாயிலிருந்து கேள்விகளை போட்டுள்ளார். இவருடைய ஆதிக்க சாதியை நிலைநிறுத்த படாதபாடு படுகிறார் பாண்டே.
 ஒரு புரிதலுமில்லாதது போன்ற கேள்விகள். அதாவது 95 சதவிகிதம் பேரை ஜாதீய முறையால் பிரித்து வைத்த மதம் பற்றி முழுமையான கள்ள மௌனம் காக்கும் பாண்டே, வம்புக்காக இஸ்லாம் பற்றியும் கிருத்துவம் பற்றியும் வாயைப் பிடுங்க முயற்சி செய்துள்ளார். பாண்டே அவர்கள் தனது வன்மத்தை வெளிப்படுத்துவது அவருக்கு பா ஜ அடிப்படையாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தரலாமேயொழிய வேறெதையும் பெற்றுத் தராது, ஜாதீய நடை முறையின் அடிப்படை பற்றிக் கேள்வி கேட்க இயலாத பாண்டே இதனை ஆதித்தனாரின் தொலைக் காட்சியில் காட்ட இயல்வதுதான் சமூக நீதியின் சரித்திரம். ஆதித்தனார் தொலைக்காட்சி ஆரிய மயமாகின்றது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக