திங்கள், 2 மார்ச், 2015

உச்ச நீதிமன்றம் : சிறப்பு காரணங்கள் இருந்தால் கற்பழிப்பு குற்றவாளிக்கு குறைந்த தண்டனை வழங்கலாம்

சிறப்பான காரணங்கள் இருந்தால், கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு குறைவான தண்டனை விதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கற்பழிப்பு வழக்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திரா. இவர் 1994–ம் ஆண்டு, ஆகஸ்டு 24–ந் தேதி, தனது வயலில் வேலை செய்த ஒரு இளம்பெண்ணை கற்பழித்து விட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டு அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீடு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து, ரவீந்திராவின் மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.
சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ரவீந்திரா அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், பி.சி.கோஷ் ஆகியோர் விசாரித்தனர்.  கற்பழிப்புக்கு சிறப்பு காரணங்கள் என்ன அழகான கில்லாடி சொற்பதம் ? நிச்சயமா இந்த நீதிபதியோட தீர்ப்பு தவறான பாதையில் நீதி செல்வதாக சந்தேகத்தை தருகிறது

விசாரணை முடிவில், மத்திய பிரதேச ஐகோர்ட்டு தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர். ஆனால், அவர் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக விதித்து, விடுதலை செய்தனர்.
தீர்ப்பு விவரம் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:–
இந்த வழக்கு, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2) (ஜி)படி, குறைவான தண்டனை வழங்க ஏற்ற வழக்காகும். வழக்கின் சம்பவம் நடந்து 20 வருடங்களாகி விட்டது. வழக்குதாரரும், எதிர் வழக்குதாரரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பினரும் சமரசமும் செய்து கொண்டு விட்டனர். வழக்கை தொடர்ந்து நடத்துவதை பாதிக்கப்பட்ட எதிர் வழக்குதாரர் விரும்பவில்லை. இவையெல்லாம், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2) (ஜி)படி, குறைவான தண்டனை விதிக்கத்தக்க சிறப்பு காரணங்களாக அமைந்துள்ளன.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2) (ஜி), ‘தீர்ப்பில் கூறத்தக்க விதத்தில், போதுமான, சிறப்பான காரணங்களை கோர்ட்டு கண்டறிந்தால், கற்பழிப்பு வழக்கில் 10 ஆண்டுக்கு குறைவான தண்டனை வழங்கலாம்’ என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக