திங்கள், 16 மார்ச், 2015

நடிகர் சையத் அலிகானுக்கு வழக்கப்பட்ட பத்மஸ்ரீ பறிக்கப்படுகிறது?

புது டில்லி:பாலிவுட் நடிகர் சயீப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைத் திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து, மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:"மும்பையில் உள்ள உணவகத்தில், தகராறில் ஈடுபட்டதற்காக சயீத் அலி கான் மீது மும்பை கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அவர் மீது மேலும் சில குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இதைக் கருத்தில் கொள்ளாமல், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.சயீப் போன்ற சர்ச்சைக்குரிய நபர்களுக்கு வழங்கப்பட்ட பத்ம விருதைத் திரும்ப பெற வேண்டும் என சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.  இவர் ஷார்மிளா தாகூர் பட்டோடி நவாப்பின் மகனாவார் . இவரது தற்போதைய மனைவி ராஜபூரின் பேத்தியான கரீன் கபூராகும்  !

சயீப் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, அறிக்கை அளிக்குமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதியே மும்பை போலீசுக்கு, உள்துறை கடிதம் எழுதியது. ஆனால், இதுவரை மும்பை போலீஸ் பதிலளிக்கவில்லை.அகர்வாலின் மனுவைத் தொடர்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீசாருக்கு மத்திய அரசு கேட்டுகொண்டதாக உள்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தவிர , மேலும் சர்ச்சைக்குரியவர்களிடம் இருந்து பத்ம விருதுகளை திரும்ப பெற வேண்டும் என சுபாஷ் அகர்வால் வலியுறுத்தியுள்ளா தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக